• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Friday, May 30, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

அரசியல் கைதிகள் என்று எவரும் சிறையில் இல்லை எனக் கூறுவார்களாயின் அவர்களை காணாமல் ஆக்கியது யார்?

Mathavi by Mathavi
January 17, 2025
in இலங்கை செய்திகள்
0 0
0
அரசியல் கைதிகள் என்று எவரும் சிறையில் இல்லை எனக் கூறுவார்களாயின் அவர்களை காணாமல் ஆக்கியது யார்?
Share on FacebookShare on Twitter

அரசியல் கைதிகள் என்று எவரும் சிறையில் இல்லை எனக் கூறுவார்களாயின் அவர்களை காணாமல் ஆக்கியது யார்? என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் கேள்வியெழுப்பியுள்ளார்.

அவரால் இன்று (17.01.2024) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ADVERTISEMENT

சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை அரசியல் தீர்மானம் எடுத்து நிபந்தனை இன்றி விடுதலை செய்யப்படல் வேண்டும் என்பதும் பயங்கரவாத தடை சட்டம் நீக்கப்பட வேண்டும் என்பதும் தமிழர்களின் மிக நீண்ட கால அரசியல் கோரிக்கையாகும். தமிழர் தாயக மண்ணான வவுனியாவில் ஜனாதிபதி தேர்தல் பிரச்சார மேடையில் நின்று தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்கள், நாம் பதவிக்கு வந்தால் அரசியல் கைதிகளை விடுதலை செய்வோம் இதற்கு தெற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என உறுதியளித்து சென்றதன் ஈரம் காயும் முன்னே அவர் அரசாங்கத்தின் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் அவர்கள் அரசியல் கைதிகள் என்று சிறைகளில் எவரும் இல்லை என குறிப்பிட்டுள்ளமை அவர்களின் அரசியல் அநாகரிகத்தை அம்பலப்படுத்தி உள்ளதோடு வாக்களித்த தமிழர்களையும் ஏமாற்றி தமிழர்களின் அரசியலை அவமானப்படுத்தி உள்ளமையையும் வன்மையாக கண்டிக்கின்றோம்.

ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் அரசியல் கைதிகள் உள்ளனர். அவர்களை விடுதலை செய்வோம் என்று கூறி பதவிக்கு வந்ததும் அரசியல் கைதிகள் என்று எவரும் சிறையில் இல்லை எனக்கூறுவார்களாயின் அவர்களை காணாமல் ஆக்கியது யார் ?
இதற்கு முன்னரும் மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் ரில்வின் சில்வா அவர்கள் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பவர்கள் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றே குறிப்பிட்டிருந்தார். அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று குறிப்பிடப்படவில்லை இது அரசாங்கத்திற்குள் பிளவையே வெளிபடுத்துகின்றது? தமிழர்களின் அரசியல் சார்ந்த விடயங்களில் எந்த ஒரு துளி நகர்வையேனும் தேசிய மக்கள் சக்தி மேற்கொள்ளப் போவதில்லை என்பதும் இதன்மூலம் தெளிவாகின்றது.

கடந்த கால ஆட்சியாளர்களைப் போல் பேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் தமிழர்களின் அரசியலை பயங்கரவாதத்திற்குள் முடக்கி பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தண்டனை பெற்றுக் கொடுத்து சிங்கள பௌத்த பேரினவாதத்தை மகிழ்விக்கவே முன் நிற்கின்றது என்பது தெளிவாகின்றது.

தற்போது சிறைகளில் 10 பேரிலும் குறைவான அரசியல் கைதிகளே உள்ளனர். இவர்களில் மரண தண்டனை கைதிகளும் உள்ளனர். இவர்களை பயங்கரவா தடை சட்டத்திற்கு வெளியே எடுத்து விடுதலை செய்யக்கூடாது என்பதில் பேரினவாத ஆட்சியாளர்கள் உறுதியாக உள்ளதோடு; தண்டனை காலத்தையும் கடந்து சிறையில் வாடும் அவர்களின் வாழ்வை சிறைக்குள்ளேயே கொலை செய்வதற்கும் முயற்சிப்பதாகவே தோன்றுகின்றது.

கடந்த காலங்களில் அரசியல் கைதிகள் தங்கள் விடுதலையை வலியுறுத்தி சிறைக்குள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தனர். சாகும் வரையான உண்ணாவிரத போராட்டத்தையும் தொடர்ந்தனர். இவர்களின் விடுதலைக்காக தமிழர் தாயகத்திலும் கொழும்பிலும் சிங்கள மக்களின் ஆதரவோடு பல்வேறு வடிவங்களில் விடுதலைக்கான முயற்சிகள் மேற்கொண்ட போதும் அது இதுவரை பலன் அளிக்கவில்லை.

நல்லாட்சி எனக் கூறப்படும் மைத்திரி – ரணில் ஆட்சிக்காலத்தில் அமைச்சு பதவிகளில் இருந்த தமிழ் அரசியல் கட்சித் தலைவர்களும், எதிர்க்கட்சியில் அமர்ந்து அரச சுகபோகங்களை அனுபவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பும் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக ஆக்கப்பூர்வமான செயற்பாடுகள் எதிலும் ஈடுபடவில்லை என்பதை வேதனையோடு மீண்டும் வெளிப்படுத்துவதோடு, அரசியல் கைதிகள் விடயத்தில் இவர்களும் ஆட்சியாளர்களின் சிந்தனையிலேயே இருந்தனர் என்பதே உண்மை. விடுதலைக்கான நீலிக் கண்ணீரையே வடித்தனர். தற்போது எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என ஊடகங்களுக்கு கூறுவது அரசியல் ஏமாற்று நாடகமே.

தமிழர் அரசியல் விடுதலைக்கான செயற்பாட்டினை போராளிகளும், மாவீரர்களும், அரசியல் கைதிகளும் உயிர்ப்புடன் வைத்திருந்தனர். இன்றும் வைத்திருக்கின்றனர் (சோரம் போனவர்களைப் தவிர ஏனையோர்) என்பதை மறக்க முடியாது. இவர்களைத் தவிர்த்து அல்லது மறந்து விடுதலை அரசியல் செய்வது என்பது அரசியல் கொலைக்கு ஒப்பாகும். அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வடகிழக்கு எங்கும் முன்னெடுக்கப்படும் கையெழுத்துப் போராட்டம் மேலும் வலுப்பெறல் வேண்டும். இது குறுகிய அரசியல் நோக்கத்திற்கு அப்பால் நிகழ வேண்டும் என்பதே மக்கள் எதிர்பார்ப்பு.

இதற்கு வடக்கு கிழக்கை பிரதிதித்துவப்படுத்துபடுத்தி தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் அழுத்தம் கொடுத்து விடுதலையை துரதப்படுத்தல் வேண்டும் எனவும் தமிழர்களின் அரசியல் எதிர்பார்ப்பிற்கு எதிராக செயற்பட வேண்டாம் எனவும் கோட்டுக் கொள்கின்றோம்.

அத்தோடு பொருளாதார வீழ்ச்சியிலிருந்து நாட்டை மீட்கவென பல்வேறு நாடுகளிடம் மண்டியிட்டு நாட்டின் இறைமையை, அரசியலை, வளங்களை தாரை வார்த்து சமரசம் பேசி பல்வேறு நாடுகளுடன் ஒப்பந்தம் செய்யும் ஆட்சியாளர்கள் (மிக அன்மையில் இந்தியாவோடும் தற்போது சீனாவுடனும் செய்து கொண்டிருக்கின்ற ஒப்பந்தங்கள் உட்பட) இந்நாட்டில் மிக நீண்ட கால வரலாற்று பாரம்பரியங்களை கொண்ட தேசிய இனமான தமிழர்களோடு அரசியல் ஒப்பந்தம் செய்ய தயங்குவது ஏன்? நாட்டின் எதிர்கால நலன் கருதி தமிழர்களின் அரசியல் அபிலாசைகளோடு முன் செல்ல அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்து ஆட்சியாளர்கள் தம் நல்லெண்ணத்தை வெளிப்படுத்த வேண்டும் எனவும் கேட்கின்றோம்.

Mathavi

Mathavi

Related Posts

கனடாவில் நினைவுத்தூபி உடைத்தமைக்கு இயக்குனர் கௌதமன் கண்டனம்..!

கனடாவில் நினைவுத்தூபி உடைத்தமைக்கு இயக்குனர் கௌதமன் கண்டனம்..!

by Thamil
May 29, 2025
0

ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை வெளிப்படுத்தும் வகையில், கனடாவின் பிரம்டன் நகரில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி திறந்துவைக்கப்பட்ட நிலையில் நேற்றுமுன்தினம் அந்த நினைவுத்தூபியானது இனந்தெரியாத நபர்களால் சேதப்படுத்தப்பட்டது....

பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு..!

பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு..!

by Thamil
May 29, 2025
0

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத் திட்டத்தின் விழிப்புணர்வு நிகழ்வு தம்பலகாமம் பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்றது. தம்பலகாமம் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்காக இன்று (29) குறித்த நிகழ்வினை...

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த அறிவித்தல்..!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த எச்சரிக்கை..!

by Thamil
May 29, 2025
0

சீரற்ற காலநிலை காரணமாக பலத்த காற்று வீசுவதுடன், கடல் கொந்தளிப்பாகக் காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. சிலாபம் முதல் புத்தளம் வரையிலும், மன்னார் முதல்...

ஜனாதிபதிக்கும், சீன அமைச்சருக்கும் இடையிலான கலந்துரையாடல்..!

ஜனாதிபதிக்கும், சீன அமைச்சருக்கும் இடையிலான கலந்துரையாடல்..!

by Thamil
May 29, 2025
0

தற்போது இலங்கைக்கு வருகை தந்துள்ள சீன மக்கள் குடியரசின் வர்த்தக அலுவல்கள் அமைச்சர் வங் வென்டாவோ இன்று (29) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை...

மண்டைதீவில் உயிர் நீத்த வீரர்களை நினைவுகூரும் வகையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு..!

மண்டைதீவில் உயிர் நீத்த வீரர்களை நினைவுகூரும் வகையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு..!

by Thamil
May 29, 2025
0

மண்டைதீவில் இன்று (29) முக்கிய உள்ளூர் பிரதிநிதிகள் மற்றும் கடற்படை வீரர்களின் பங்கேற்புடன் காலை 10 மணிக்கு மரம் நடும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மே 18 ஆம்...

வவுனியாவில் கடும் காற்றினால் மரம் முறிந்து வீடுகள் தேசம் ; போக்குவரத்து ஸ்தம்பிதம்..!

வவுனியாவில் கடும் காற்றினால் மரம் முறிந்து வீடுகள் தேசம் ; போக்குவரத்து ஸ்தம்பிதம்..!

by Thamil
May 29, 2025
0

வவுனியாவில் கடந்த இரண்டு நாட்களாக கடும் காற்று வீசி வருகின்ற நிலையிலேயே இச் சேதம் இடம்பெற்றுள்ளதுடன் இதனால் அப் பாதையூடான போக்குவரத்தும் தடைப்பட்டிருந்தது வவுனியா தெற்கு தமிழ்...

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி தொடர்பான அறிக்கை முல்லைத்தீவு நீதிமன்றில் சமர்ப்பிப்பு..!

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி தொடர்பான அறிக்கை முல்லைத்தீவு நீதிமன்றில் சமர்ப்பிப்பு..!

by Thamil
May 29, 2025
0

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியில் மீட்கப்பட்ட 52 மனித எலும்புக்கூடுகளின் வயது, பாலினம், இறப்புக்கான காரணம் என முக்கிய விபரங்கள் அடங்கிய அறிக்கை சட்டவைத்திய அதிகாரி குழுவினரால் முல்லைத்தீவு நீதிமன்றில்...

இவ்வுலகை விட்டுப் பிரிந்த மாணவி தர்சினி ; ஆழ்ந்த இரங்கல்..!

இவ்வுலகை விட்டுப் பிரிந்த மாணவி தர்சினி ; ஆழ்ந்த இரங்கல்..!

by Thamil
May 29, 2025
0

தினகரன் ஊடாக உதவி கோரியிருந்த இராசரத்தினம் தர்சினி என்பவர் சிறுநீரக செயலிழப்பினால் உயிரிழந்துள்ளார். இவரின் சிகிச்சைக்காக உதவி செய்த அனைவருக்கும் இதனை அறியத் தருகின்றோம். இவரின் ஆத்மா...

யாழில் திடீரென உயிரிழந்த ஆண் ; உடற்கூற்று பரிசோதனைகளில் வெளியான தகவல்..!

யாழில் திடீரென உயிரிழந்த ஆண் ; உடற்கூற்று பரிசோதனைகளில் வெளியான தகவல்..!

by Thamil
May 29, 2025
0

யாழில் இன்றைய தினம் (29) ஆண் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார். கீரிமலை வீதி, சித்தங்கேணி பகுதியைச் சேர்ந்த கணேசலிங்கம் ராஜ்குமார் (வயது 37) எனாபவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்....

Load More
Next Post
வடக்கு மாகாண தைப்பொங்கல் விழா.!

வடக்கு மாகாண தைப்பொங்கல் விழா.!

வெருகல் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்.!

வெருகல் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்.!

நாடாளுமன்ற ஊழியர்கள் மூவர் பணி நீக்கம்.!

நாடாளுமன்ற ஊழியர்கள் மூவர் பணி நீக்கம்.!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Popular News

  • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0
  • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0

Follow Us

    Thinakaran

    உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

    www.thinakaran.com

    © 2024 Thinakaran.com

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    No Result
    View All Result
    • முகப்பு
    • இலங்கை
      • முல்லைதீவு செய்திகள்
      • வவுனியா செய்திகள்
      • கிளிநொச்சி செய்திகள்
      • திருகோணமலை செய்திகள்
      • மட்டக்களப்பு செய்திகள்
      • மன்னார் செய்திகள்
      • மலையக செய்திகள்
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • நிகழ்வுகள்
    • எம்மை பற்றி