சீரற்ற காலநிலை காரணமாக பலத்த காற்று வீசுவதுடன், கடல் கொந்தளிப்பாகக் காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சிலாபம் முதல் புத்தளம் வரையிலும், மன்னார் முதல் காங்கேசன்துறை வரையிலும் , காலி முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள கடற்கரையோரப் பகுதிகளுக்கு இந்த சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மறு அறிவித்தல் வரை குறித்த கடற்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென கடற்படை மற்றும் கடற்தொழில் சமூகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமைகள் அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிக்கலாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதனால், இடியுடன் கூடிய மழை, தற்காலிக கடுமையான காற்று மற்றும் மின்னல் ஆகியவற்றால் ஏற்படும் ஆபத்துகளை குறைக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.