கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியில் மீட்கப்பட்ட 52 மனித எலும்புக்கூடுகளின் வயது, பாலினம், இறப்புக்கான காரணம் என முக்கிய விபரங்கள் அடங்கிய அறிக்கை சட்டவைத்திய அதிகாரி குழுவினரால் முல்லைத்தீவு நீதிமன்றில் இன்று சமர்ப்பிக்கப்பட்டது.
“இந்த இறுதி அறிக்கைகளில் காணப்படுகின்ற தமிழீழ விடுதலைப் புலிகளுடைய உறுப்பினர்களுடையது எனக் கருதப்படும் இலக்கங்களை காணாமல் போன நபர்கள் பற்றிய அலுவலகம் பத்திரிகைகளில் பிரசுரிக்கவிருக்கிறது. இந்த இலக்கங்களுடன் தொடர்புடைய நபர்கள் பற்றி அறிந்தவர்கள் நீதிமன்றப் பதிவாளரிடம் அறிவிக்கும் பட்சத்தில், மேற்கொண்டு இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக தீர்மானம் எடுக்கப்பட இருக்கின்றது” எனக் காணாமலாக்கப்பட்ட உறவினர்களின் சார்பாக நீதிமன்றில் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணி எஸ்.நிறஞ்சன் தெரிவித்திருந்தார்.
