கிளீன் ஸ்ரீலங்கா வேலைத் திட்டத்தின் விழிப்புணர்வு நிகழ்வு தம்பலகாமம் பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்றது.
தம்பலகாமம் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்காக இன்று (29) குறித்த நிகழ்வினை தம்பலகாமம் இராணுவ முகாமின் கட்டளையிடும் அதிகாரி நடத்தினார்.
கிளீன் ஸ்ரீலங்கா என்பது வெளிச் சுற்றுப்புறச் சூழலை மாத்திரம் சுத்தம் செய்வதல்ல. சமூக பொருளாதார துறையில் மாற்றங்களை கொண்டு வருதல் உள்ளிட்ட பல விடயங்கள் உள்ளதாக வளவாளராக கலந்து கொண்ட இராணுவ உயரதிகாரியால் எடுத்துரைக்கப்பட்டிருந்தது.
இதில் தம்பலகாமம் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன், நிர்வாக உத்தியோகத்தர் எல். உடகெதர உட்பட சக உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.


