வவுனியாவில் கடந்த இரண்டு நாட்களாக கடும் காற்று வீசி வருகின்ற நிலையிலேயே இச் சேதம் இடம்பெற்றுள்ளதுடன் இதனால் அப் பாதையூடான போக்குவரத்தும் தடைப்பட்டிருந்தது
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்குட்பட்ட அண்ணாநகர் கிராமத்தில் இன்று (29) மதியம் வீதியோரமாக நின்ற மரம் முறிந்து வீழ்ந்ததில் வீட்டின் வேலியின் தகரங்கள் சேதமடைந்தமையுடன் மற்றைய வீடு ஒன்றின் பிரதான வாயில் கதவும் சேதமடைந்துள்ளது.
இவ்விடயம் தொடர்பாக முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் தர்மகுணசிங்கம் சுஜீவன், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை மற்றும் மின்சார சபைக்கு வழங்கிய தகவலையடுத்து மின்சார சபையினர் மின்சார தடையினை நிவர்த்தி செய்தமையுடன் பிரதேச சபையினர் மரத்தினை அகற்றி போக்குவரத்தினையும் சீரமைத்தனர்.




