உழவர் திருநாளான தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் இந்து ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் இன்று இடம்பெற்றன.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். அதற்கு இணங்க தமிழ் மக்கள் தமது சூரியக் கடவுள்ளுக்கு நன்றி தெரிவித்து தைப்பொங்கலைக் கொண்டாடி வருகின்றனர்.
அதற்கிணங்க, வவுனியாவின் பிரதான ஆலயங்களில் ஒன்றாகிய கந்தசாமி ஆலயத்தில் புதுப் பானையில் புத்தரிசி இட்டு பொங்கல் இடம்பெற்றதுடன், ஆலயப் பிரதம குரு தலைமையில் விசேட அபிஷேகம் மற்றும் பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றன.
ADVERTISEMENT
இதன்போது, பக்த அடியார்கள் கலந்துகொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் பொங்கல் வாழ்த்துக்களையும் பரிமாறிக் கொண்டனர்.
இதேபோல் ஏனைய இந்து ஆலயங்களிலும் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.



