அம்பாந்தோட்டை, வலஸ்முல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜூலம்பிட்டிய பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை (13) காலை இடம்பெற்ற விபத்தில் 03 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக வலஸ்முல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
உந்துருளி ஒன்று வீதியின் வலது பக்கமாகத் திரும்ப முயன்ற போது எதிர்த்திசையில் பயணித்த மற்றுமொரு உந்துருளியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது உந்துருளிகளின் செலுத்துனர்கள் இருவரும் பின்புறத்தில் அமர்ந்திருந்த நபரும் சிறுமியும் காயமடைந்து வலஸ்முல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிறுமி மேலதிக சிகிச்சைக்காக மாத்தறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ADVERTISEMENT
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வலஸ்முல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.