Faith learning center என்ற இலவச கல்வி நிலையமானது நேற்றையதினம் (11) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இந்த கல்வி நிலையானது அராலி மேற்கு, வட்டுக்கோட்டையில் திறந்து வைக்கப்பட்டது.
தமிழர்களின் பாரம்பரிய கோலாட்டத்துடன் விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டு, கல்வி நிலையத்தின் கல்வெட்டு திரை நீக்கம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து மங்கல விளக்கு ஏற்றி வைக்கப்பட்டு நிகழ்வு ஆரம்பமானது. பின்னர் வரவேற்புரை, தலைமையுரை, விருந்தினர்களின் உரைகள் மற்றும் மாணவர்களது கலை நிகழ்வுகள் என்பன இடம்பெற்றன.
இந்த கல்வி நிலையத்திற்கு நிதியை வழங்கிவரும் திருமதி. வசந்தா ராஜேஸ்வரன் அவர்கள் நிகழ்வுக்கு தலைமை தாங்கியதுடன், பிரதம அதிதியாக வைத்தியர் வின்ஸ்டன் ஜெசுரன் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்துடன், கல்வி நிலையத்தின் பொறுப்பு ஆசிரியை திருமதி.ரோஜா, தென்னிந்திய திருச்சபையின் பேராயர் திரு.பத்மதயாளன், பாடசாலையின் அதிபர்கள், ஆசிரியர்கள், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.