இலங்கை தமிழரசு கட்சியின் ஸ்தாபக தலைவர் தந்தை செல்வாவின் உடைய நினைவுச்சதுக்கம் அமைந்துள்ள பகுதியில் இன்று காலை இலங்கை தமிழரசுக்கட்சியின் ஏற்பாட்டில் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இவ் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டது.
இலங்கை தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், தொண்டர்கள், கட்சி உறுப்பினர்கள் எனப் பலரும் இந்த சிரமதானத்தில் கலந்து கொண்டனர்.
ADVERTISEMENT
தந்தை செல்வாவின் நினைவுச்சதுக்கம் அமைந்துள்ள பகுதி அன்மையில் நிலவிய மழையுடன் கூடிய காலநிலமை காரணமாக புற்கள் வளர்ந்து பற்றைக்காடாக காட்சி அளித்தநிலையில் இந்த சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டது.


