கொட்டகலை புகையிரத நிலைய பகுதியில் தண்டவாளத்தில் தலை வைத்து இளைஞன் ஒருவர் உயிரை மாய்த்துள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிசார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் இன்று மதியம் 2.10 மணியளவில் கொட்டகலை கிரிஸ்லஸ்பாம் பகுதியில் இடம் பெற்றுள்ளது.
சுமார் 26 வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவர் இன்று மதியம் கொழும்பில் இருந்து பதுளை நோக்கி செல்லும் புகையிரதத்தில் தனது தலையை தண்டவாளத்தில் வைத்து உயிரிழந்துள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிசார் தெரிவித்தனர்.
ADVERTISEMENT
தலை துண்டிக்கப்பட்ட நிலையில் உள்ள சடலம் கொட்டகலை புகையிரத நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த இளைஞர் பற்றிய விபரம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உயிரிழந்த நபரின் சடலம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.