மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் இரு வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளது என நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் நந்தன கலபட தெரிவித்தார்.
இதனால் தாழ் நில பகுதியில் உள்ள அனைத்து மக்களும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என அவர் கூறினார்.
மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக இப் பகுதியில் உள்ள அனைத்து நீர்த் தேக்கத்திலும் நீர் வரத்து அதிகரித்துள்ளது எனவும் இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது.
குறிப்பாக விமலசுரேந்திர, கென்யோன், லக்சபான, பொல்பிட்டிய நவலக்சபான, கலுகல, காசல்ரீ ஆகிய நீர்த் தேக்கங்களின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை எட்டியது.
எந்த நேரத்திலும் வான் கதவுகள் திறந்து விட வாய்ப்புண்டு எனவும் மவுசாகலை நீர் தேக்கத்தின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. இன்னும் ஏழு அடி உயர்ந்தால் வான் கதவுகள் திறந்து விட வாய்ப்புண்டு எனவும் தாழ் நிலப் பகுதியில் உள்ள அனைத்து மக்களும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் நந்தன கலபட முன் அறிவிப்பு வழங்கினார்.
மேல் கொத்மலையின் வான் கதவுகள் திறக்கப்பட்டதால் மகாவலி கங்கை கரையோர பகுதியில் உள்ள அனைத்து மக்களும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அவர் மேலும் தெரிவித்தார்.