Browsing: ஒரு

காணாமல்போன  சூர்தின் முஹம்மட் முன்சிப் என்ற  மாணவனின் உடல் இன்று காலை   கரையோதுங்கியுள்ளது. மற்றுமொரு மாணவன் தொடர்பான தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. சம்பவதினம் மாளிகைக்காடு – சாய்ந்தமருது பகுதியை  சேர்ந்த இரண்டு மாணவர்களே புகைப்படம் எடுத்து விளையாடிக் கொண்டிருந்தபோது கடலில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்தனர். 15 வயதுக்குட்பட்ட 08  பாடசாலை  மாணவர்கள்  தொழுகையை முடித்துக்கொண்டு, துவிச்சக்கர வண்டியில் நிந்தவூர் – ஒலுவில் எல்லை கடற்கரைக்கு சென்று புகைப்படம் எடுத்து விளையாடிக் கொண்டிருந்த போது  இவ்வனர்த்தம் […]

தேசிய லொத்தர் சபையினால் 2023 ஆம் ஆண்டு விற்பனை செய்யப்பட்ட லொத்தர் சீட்டுக்களின் சூப்பர் பரிசு மற்றும் மில்லியன் பரிசுத் தொகைகளுக்கான காசோலைகள் மற்றும் வாகனங்கள் வென்றவர்களுக்கான ஆவணங்கள் ஆகியவற்றை வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நிதி அமைச்சின் கேட்போர்கூடத்தில்  (16) நடைபெற்றது. இதன்போது, கொவிசெத, மெகா பவர், மெகா பவர் 60 உள்ளிட்ட லொத்தர் சீட்டிழுப்புக்களின் வெற்றியாளர்களுக்கான பணப் பரிசு மற்றும் வாகன பரிசுகள், விற்பனை முகவர்களுக்கான ஊக்குவிப்பு பரிசுகள், சான்றிதழ்கள் என்பனவும் […]

பெருந்தோட்ட மக்கள் தமிழீழத்தை கோரவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார். ஹட்டன் வட்டவளை பகுதி பாடசாலையொன்றில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்றபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பெருந்தோட்ட மக்கள் பொருளாதார ரீதியில் நலிவடைந்திருந்தாலும் அறிவானவர்கள். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மக்கள் சரியான தீர்மானத்தை எடுப்பார்கள். அரசியல் சாசனத்தின் அடிப்படையில் தேர்தல் நடைபெறும் என கருதுவதாகவும், தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தேர்தலை நடத்துவார் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள நிலையில் கட்சி பேதங்களை […]

இந்தியாவின் முன்னாள் ராஜீவ்காந்தி கொலை தொடர்பில் தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலையான நிலையில் தொடர்ந்தும் திருச்சி சிறப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள சாந்தனை இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்கான உத்தரவு ஒரு வாரகாலத்தில் வெளியாகும் என இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது. தாயாரை கவனித்துக்கொள்வதற்காக தன்னை விடுதலை செய்யக்கோரி சாந்தன் தாக்கல் செய்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தவேளை மத்திய அரசின் சார்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணையின் போது சாந்தன் இலங்கை திரும்புவதற்கான […]

நேற்று 09, ம் திகதி இன்று 10, ம் திகதி சனிக்கிழமை என்பதால் சிவனடி பாத மலைக்கு தரிசனம் செய்ய அதிக அளவில் ஹட்டன் வழியாகவும் இரத்தினபுரி காவத்த வழியாகவும் யாத்திரியர்கள் வந்த வண்ணம் உள்ளனர் என நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சாந்த வீரசேகர தெரிவித்தார். சுமார் ஒரு இலட்சத்தை தாண்டியுள்ளது பக்தர்களின் வருகை. நல்லதண்ணி மரே நெடுஞ்சாலையில் மற்றும் நல்லதண்ணி மஸ்கெலியா நெடுஞ்சாலையில் ரக்காடு கிராமம் வரை தற்போது வாகனங்கள் வீதியின் இரு பக்கங்களிலும் […]

தெல்லிப்பழை காசி விநாயகர் தேவஸ்தானத்தில் ஆலயத்திற்கு பயன்தரக்கூடிய ஒரு தொகுதி மரக்கன்றுகள் இன்று(9) .மாலை 4.00 மணியளவில் நாட்டப்பட்டது. காசி விநாயகர் ஆலய தொண்டர்களும் ; தெல்லிப்பழை பாலர் ஞானோதய சபை சிறுவர்களும் இணைந்து இம் மரநடுகை முன்னெடுக்கப்பட்டது.தினசரி வெள்ளிக்கிழமைகளில் அறநெறி வகுப்புக்கள் ஆலயத்தில் நடைபெற்றுவரும் நிலையில் அதனுடன் இணைந்த வகையில் சமுகப் பற்றையும் ஏற்படுத்துமுகமாகவே இச் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது

அரச அதிகாரிகளின் அலட்சியத்தால், நாட்காட்டியிலேயே இல்லாத பெப்ரவரி 30 ஆம் திகதி நடைமுறைச் சோதனைக்கு செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சாரதி பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஒருவர், சாரதி அனுமதிப்பத்திரத்தை எடுப்பதற்காக விண்ணப்பித்துள்ளார். அவ்வாறு விண்ணப்பிக்கும் சகலருக்கும் நடைமுறை சோதனைக்கான (Practical test date) திகதி அறிவிக்கப்படும். எனினும், அம்பாறை மோட்டார் திணைக்களத்தினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள சோதனைக்கான திகதியே, விண்ணப்பித்தவருக்கு சோதனையாகியுள்ளது. அதில், பதிக்கப்பட்ட இறப்பர் முத்திரையில், 2024 பெப்ரவரி 30ஆம் திகதி என குறிப்பிடப்பட்டுள்ளது. எந்தவொரு வருடத்திலும் பெப்ரவரி மாதத்தில் […]

மிதிகம ரயில் கடவையில் நேற்று செவ்வாய்க்கிழமை (23) இடம்பெற்ற ரயில், கார் விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பெலியத்தையிலிருந்து மாகோ நோக்கி சென்று கொண்டிருந்த ரஜரட்ட…

ஹங்வெல்ல, தும்மோதர சந்திக்கு அருகில் இன்று (15) காலை பஸ் சாரதி ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். படுகொலை செய்யப்பட்ட நபர் இன்று காலை 5.55 மணியளவில்…

குடும்பத்தின் ஒரே மகளான ஒன்பது வயது சிறுமியை கடுமையாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாக்கிய தந்தை வெயாங்கொடை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு கடந்த 10ஆம் திகதி அத்தனகல்ல நீதவான்…