உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

ஒரே பெண்ணுடன் இருவர் தொடர்பு!! ஒரு பெண்ணுக்காக நடந்த கொலை!

க்ரைம் ஸ்டோரி 3 ஆண்டுகள் முன்
23 பார்வைகள்

ஹங்வெல்ல, தும்மோதர சந்திக்கு அருகில் இன்று (15) காலை பஸ் சாரதி ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

படுகொலை செய்யப்பட்ட நபர் இன்று காலை 5.55 மணியளவில் புத்தரை வழிபடுவதற்காக பூ பறிக்கச் சென்ற போது இந்தச் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஹங்வெல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

கொலை செய்யப்பட்ட நபர் மற்றும் சந்தேகநபர் ஆகிய இருவரும் ஒரே பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், மோதல் காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கொலையை செய்த பின்னர் சந்தேகநபர் வாகரை புகையிரத நிலையத்தில் இருந்து கொழும்பு நோக்கி செல்லும் ரயிலில் ஏறி தப்பிச் சென்ற போது சந்தேக நபரை மீகொட பொலிஸார் கைது செய்து ஹங்வெல்ல பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இங்கிரிய பிரதேசத்தில் வசிக்கும் 35 வயதுடைய 2 பிள்ளைகளின் தந்தையே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் துன்மோதர, நுகெதென்ன பிரதேசத்தில் வசிக்கும் நபர் என தெரிவிக்கப்படுகின்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

க்ரைம் ஸ்டோரி

ஓய்வை அறிவித்தார் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கெப்டன்.!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், விக்கெட் கீப்பர் பெட்ஸ்மேனுமான சர்பராஸ் கான் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.இவரது தலைமையில் பாகிஸ்தான் அணி இரண்டு ஐசிசி கோப்பைகளை…

35 0 0
க்ரைம் ஸ்டோரி

தேசிய வைத்திய சாலையில் காபனீரொட்சைட் வாயு செலுத்தப்பட்டு பெண் உயிரிழப்பு!

அதிக அளவு காபனீரொட்சைட் வாயுவை செலுத்தியதன் காரணமாக பெண் நோயாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், கொழும்பு தேசிய மருத்துவமனையின் பணிப்பாளரிடம், சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன…

23 0 0
க்ரைம் ஸ்டோரி

பாலியல் ரீதியிலான செயற்பாடுகளை வீடியோ எடுத்து இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்து பணம் சம்பாதித்த இளம் தம்பதியினர் கைது

பாலியல் ரீதியிலான செயற்பாடுகளை வீடியோ எடுத்து இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்து பணம் சம்பாதித்த இளம் தம்பதி ஒன்று ராகம பிரதேசத்தில் பொலிஸ் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால்…

22 0 0
க்ரைம் ஸ்டோரி

திருடப்பட்ட 19 மோட்டார் சைக்கிள்கள் பொலிஸார் மீட்பு

நுகேகொடையில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையைத் தொடர்ந்து பல்வேறு இடங்களிலிலிருந்து குறித்த மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டுள்ளன. சந்தேகநபர் ஒருவரின் கைது மூலம் குறித்த மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டதோடு,…

26 0 0