போ*தைப்பொருளுடன் ஒருவர் கைது.!
ஜா-எல – அவெரியவத்த பகுதியில் ‘ஹஷீஸ்’ போதைப்பொருளைத் தம்வசம் வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர், நேற்று (20) மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் வெல்லவாய பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடையவரெனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவெரியவத்த பகுதியில் மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவு அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இக்கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
இதன்போது, சந்தேகநபரிடமிருந்து 100 கிராம் 500 மில்லிகிராம் ‘ஹஷீஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.


