உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
22 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை மேலும் இரு வருடங்கள் நீடிப்பு.!

இலங்கை செய்திகள் 2 நாட்கள் முன்
148 பார்வைகள்

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை எதிர்வரும் டிசம்பர் மாதத்துடன் நிறைவுக்கு வந்துவிடும் எனப் பரப்பப்படும் தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை எனவும், இந்தச் சலுகைக் காலம் 2026 டிசம்பர் முதல் 2028 டிசம்பர் வரை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டுள்ளதால் வீணாக அச்சமடையத் தேவையில்லை எனவும் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை நிறைவு குறித்து ஊடகவியலாளர்கள் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அபிவிருத்தியடைந்து வரும் நாடான இலங்கைக்கு ஐரோப்பியச் சந்தைக்கு வரிகளற்ற முறையில் அல்லது குறைந்த வரியில் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்காகவே இந்த விசேட வரிச்சலுகை வழங்கப்படுகின்றது.

கடந்த காலங்களில் 7 வருடங்கள் இந்தச் சலுகை இலங்கைக்கு மறுக்கப்பட்டிருந்த நிலையில், அதனை மீண்டும் தடையின்றிப் பெற்றுக்கொள்வதற்கான பணிகளை முன்னெடுக்க வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் வர்த்தக அமைச்சு ஆகியவற்றின் தலைமையில் 9 அமைச்சர்களைக் கொண்ட விசேட அமைச்சரவைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த அமைச்சரவைக் குழுவின் வழிகாட்டலில் அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளைக் கொண்ட தொழில்நுட்பக் குழுவொன்றும் அமைக்கப்பட்டு, 2027ஆம் ஆண்டு இறுதியடைவதற்குள் இந்தச் சலுகைக்கான புதிய விண்ணப்பச் செயல்முறைகளை நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

இலங்கை ஆண்டுதோறும் சுமார் 3 ஆயிரம் வகையான பொருட்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் 2 ஆயிரத்து 400 மில்லியன் முதல் 3 ஆயிரம் மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை ஏற்றுமதி வருவாயை ஈட்டுவதுடன், ஜி.எஸ்.பி. பிளஸ் மூலம் 150 மில்லியன் முதல் 200 மில்லியன் டொலர்கள் வரை கூடுதல் வரி நிவாரணத்தைப் பெறுகின்றது.

சாதாரண ஜி.எஸ்.பி. சலுகையில் 7.5 சதவீதம் வரை மட்டுமே வரிக்குறைப்பு கிடைக்கும் நிலையில், ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையின் கீழ் 100 சதவீத வரி விலக்கு வழங்கப்படுகின்றது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குதல், தொழிலாளர் உரிமைகள் மற்றும் அடிப்படை மனித உரிமைகளைப் பேணுதல் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேச்சுகள் இடம்பெற்று வருவதுடன், அரசு அதற்கான உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

மொத்த தேசிய உற்பத்தியின் அடிப்படையில் 2025ஆம் ஆண்டில் இலங்கை நடுத்தர வருமானம் பெறும் நாடாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், தொடர்ச்சியாக 3 ஆண்டுகள் (2025, 2026, 2027) நடுத்தர வருமான நிலையிலேயே நீடித்தால், ஜி.எஸ்.பி. பிளஸ் விதிகளின்படி இந்தச் சலுகை எதிர்காலத்தில் கைநழுவிப் போகும் வாய்ப்புள்ளது.

இதனை எதிர்கொள்ளும் வகையில், புதிய உலகளாவிய சந்தைகளைக் கண்டறிந்து 2030ஆம் ஆண்டளவில் நாட்டின் மொத்த ஏற்றுமதி வருவாயை 35 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்த்த அரசு பாரிய பொருளாதார வளர்ச்சித் திட்டங்களை அமுல்படுத்தி வருகின்றது. தற்போது இலங்கையின் ஏற்றுமதியில் 18 சதவீதம் ஐரோப்பியச் சந்தைக்கும், 14 சதவீதம் பிரித்தானியாவிற்கும் ஏற்றுமதி செய்யப்படுவதுடன், இதில் 60 சதவீதத்தை ஆடைக் கைத்தொழில் ஏற்றுமதியே வகிக்கின்றது.

இலங்கை என்றென்றும் அபிவிருத்தியடைந்து வரும் நாடாக மட்டுமே தங்கியிருக்க முடியாது என்பதால், ஏற்றுமதியாளர்களுக்குத் தேவையான உலகளாவிய போட்டித் திறனை வழங்கி, நாட்டை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவது அரசின் முதன்மை இலக்காகும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இந்தியா – இலங்கை நட்புறவு மற்றும் பரஸ்பர புரிந்துணர்வை வலுப்படுத்தும் நோக்கில் ‘மைத்திரி சேது யாத்திரை 2027’

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான நீண்டகால நட்புறவு, பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்பை இளைய தலைமுறையினூடாக மேலும் வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இந்தியா – இலங்கை தேசிய…

118 0 0
இலங்கை செய்திகள்

ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தியே தனித்த கட்சி உருவாகக் காரணம் – காதர் மஸ்தான்

ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தி உள்ளிட்ட பல்வேறு காரணங்களே தனித்த அரசியல் கட்சியை உருவாக்க வேண்டிய சூழலை ஏற்படுத்தியதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர்…

126 0 0
இலங்கை செய்திகள்

ஹட்டன் நகரில் தொடர் கொள்ளை!

இன்று காலை (22) ஹட்டன் நகரில் உள்ள பின் சாலையில் அமைந்துள்ள 4 கடைகளில் திருடன் புகுந்துள்ளதாக ஹட்டன் காவல்துறை தெரிவித்துள்ளது. தங்கப் பொருட்கள் தயாரிக்கும் 3…

118 0 0
இலங்கை செய்திகள்

மல்வத்தை கோர விபத்து: தீவிர சிகிச்சை பெற்று வந்த மற்றைய இளைஞரும் உயி@ரிழப்பு!

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தைப் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை (20) மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் லொறி ஆகியன மோதிய கோர விபத்தில்…

129 0 0