உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
22 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

காற்று மாசு; மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை.!

இலங்கை செய்திகள் 2 நாட்கள் முன்
151 பார்வைகள்

தற்போது நிலவுகின்ற காற்று மாசு தொடர்பான ஊடக சந்திப்பு ஒன்றை மத்திய சுற்றாடல் அதிகார சபை வடமாகாண அலுவலக பணிப்பாளர் P.துவாரகன் அவர்கள் இன்றையதினம் 20.11.2026 மேற்கொண்டிருந்தார்.

இதன் போது ஊடகங்களுக்கு குறிப்பிடுகையில்,
வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட ‘டீமாக்கா’ காற்றுச் சுழற்சி மற்றும் எல்லை கடந்த காற்றோட்டச் சுழற்சி காரணமாக, அண்டை நாடுகளில் உள்ள வளி மாசாக்கிகள் இலங்கையின் வான்பரப்புக்குள் நுழைந்துள்ளன.

இதன் காரணமாகத் தற்போது இலங்கையின் வளிமண்டலத்தில் பனிமூட்டம் போன்ற ஒரு தோற்றப்பாடு காணப்படுகிறது.

தர அளவீடு
உலக சுகாதாரப் பணிமனையின் அறிவிப்பின்படி, இந்த வளியின் தரம்0. 50 வரை ஆரோக்கியமானது. ஆனால், தற்பொழுது இந்த அளவு 150-ஐ விட அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக, நேற்றைய தினம் கிளிநொச்சி மாவட்டத்தில் 150 ஆக காணப்பட்ட காற்றின் தரம் வடமாகாணத்தின் யாழ்ப்பாணத்தில் இன்று இந்த நிலைமை 198 ஆகவும், கிளிநொச்சி மாவட்டத்தில் 175 ஆகவும் அதிகரித்து பதிவாகியுள்ளது.

பாதுகாப்பு மற்றும் எச்சரிக்கை
இந்த நிலைமை மேலும் இரண்டு, மூன்று நாட்களுக்கு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் அனைவரும் அவசியமின்றி வெளியில் செல்வதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வெளியில் செல்ல நேரிடும்போது N95 போன்ற முகமூடிகளை கட்டாயம் அணிந்து, தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

குறிப்பாக சுவாச நோய்கள் மற்றும் ஒவ்வாமை உள்ளவர்கள் கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டும் என தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இந்தியா – இலங்கை நட்புறவு மற்றும் பரஸ்பர புரிந்துணர்வை வலுப்படுத்தும் நோக்கில் ‘மைத்திரி சேது யாத்திரை 2027’

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான நீண்டகால நட்புறவு, பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்பை இளைய தலைமுறையினூடாக மேலும் வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இந்தியா – இலங்கை தேசிய…

118 0 0
இலங்கை செய்திகள்

ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தியே தனித்த கட்சி உருவாகக் காரணம் – காதர் மஸ்தான்

ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தி உள்ளிட்ட பல்வேறு காரணங்களே தனித்த அரசியல் கட்சியை உருவாக்க வேண்டிய சூழலை ஏற்படுத்தியதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர்…

126 0 0
இலங்கை செய்திகள்

ஹட்டன் நகரில் தொடர் கொள்ளை!

இன்று காலை (22) ஹட்டன் நகரில் உள்ள பின் சாலையில் அமைந்துள்ள 4 கடைகளில் திருடன் புகுந்துள்ளதாக ஹட்டன் காவல்துறை தெரிவித்துள்ளது. தங்கப் பொருட்கள் தயாரிக்கும் 3…

118 0 0
இலங்கை செய்திகள்

மல்வத்தை கோர விபத்து: தீவிர சிகிச்சை பெற்று வந்த மற்றைய இளைஞரும் உயி@ரிழப்பு!

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தைப் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை (20) மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் லொறி ஆகியன மோதிய கோர விபத்தில்…

129 0 0