உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
22 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

சட்டவிரோத மருந்துப் பொருட்கள், விதைகள் மற்றும் அழகுசாதனப் பொருட்களுடன் ஒருவர் கைது.!

இலங்கை செய்திகள் 2 நாட்கள் முன்
143 பார்வைகள்

சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட சுமார் 60 இலட்சம் ரூபாய் பெறுமதியான மருந்துப் பொருட்கள், விதைகள் மற்றும் அழகுசாதனப் பொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கட்டுநாயக்கவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் பெரியமுல்ல பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவராவார்.

நேற்று வியாழக்கிழமை (19) கட்டுநாயக்க பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முதலீட்டுச் சபை சமிக்ஞை விளக்குச் சந்திக்கு அருகில், நீர்கொழும்பு பிராந்திய குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகள் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இக் கைது இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பொருட்களைக் காரொன்றில் கடத்திச் சென்ற சந்தேகநபர், காருடன் கைது செய்யப்பட்டு மேலதிக நடவடிக்கைகளுக்காக விமான நிலையப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

சந்தேகநபரும் கைப்பற்றப்பட்ட பொருட்களும் மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலையப் பொலிஸாரினால் கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இந்தியா – இலங்கை நட்புறவு மற்றும் பரஸ்பர புரிந்துணர்வை வலுப்படுத்தும் நோக்கில் ‘மைத்திரி சேது யாத்திரை 2027’

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான நீண்டகால நட்புறவு, பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்பை இளைய தலைமுறையினூடாக மேலும் வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இந்தியா – இலங்கை தேசிய…

118 0 0
இலங்கை செய்திகள்

ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தியே தனித்த கட்சி உருவாகக் காரணம் – காதர் மஸ்தான்

ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தி உள்ளிட்ட பல்வேறு காரணங்களே தனித்த அரசியல் கட்சியை உருவாக்க வேண்டிய சூழலை ஏற்படுத்தியதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர்…

126 0 0
இலங்கை செய்திகள்

ஹட்டன் நகரில் தொடர் கொள்ளை!

இன்று காலை (22) ஹட்டன் நகரில் உள்ள பின் சாலையில் அமைந்துள்ள 4 கடைகளில் திருடன் புகுந்துள்ளதாக ஹட்டன் காவல்துறை தெரிவித்துள்ளது. தங்கப் பொருட்கள் தயாரிக்கும் 3…

118 0 0
இலங்கை செய்திகள்

மல்வத்தை கோர விபத்து: தீவிர சிகிச்சை பெற்று வந்த மற்றைய இளைஞரும் உயி@ரிழப்பு!

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தைப் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை (20) மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் லொறி ஆகியன மோதிய கோர விபத்தில்…

129 0 0