உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
22 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஜனாதிபதி அநுரகுமாரவுடன்அமெரிக்கத் தூதுவர் சந்திப்பு!

இலங்கை செய்திகள் 3 நாட்கள் முன்
151 பார்வைகள்

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் எரிக் மேயர், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவைச் சந்தித்துப் பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட இருதரப்பு முக்கிய விடயங்கள் குறித்துக் கலந்துரையாடியுள்ளார்.

நேற்று இடம்பெற்ற இந்தச் சந்திப்பு தொடர்பில் அமெரிக்கத் தூதுவர் எரிக் மேயர் தனது உத்தியோகபூர்வ ‘எக்ஸ்’ சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.

அந்தப் பதிவில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:-

“ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை நேற்று சந்தித்து, அமெரிக்கா – இலங்கை இடையிலான ஒத்துழைப்பின் எதிர்காலம் மற்றும் இரு தரப்புக்கும் பொதுவான முன்னுரிமைகள் குறித்துக் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டதில் மகிழ்ச்சியடைகின்றேன்.

எங்களது வளர்ந்து வரும் பாதுகாப்பு ஒத்துழைப்பு, நாடுகடந்த குற்றச்செயல்களை எதிர்கொள்வதில் மேற்கொள்ளப்பட்ட வெற்றிகரமான கூட்டு முயற்சிகள் மற்றும் இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் நம்பகமான அமெரிக்கத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து நாங்கள் விரிவாகக் கலந்துரையாடினோம்.

எங்கள் குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், பொருளாதாரங்களுக்கு ஆதாரமாக விளங்கும் வர்த்தகப் பாதைகளைப் பாதுகாக்கவும், மேலும் சுதந்திரமான, திறந்த மற்றும் வளமான இந்தோ – பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்கர்களுக்கும் இலங்கையர்களுக்கும் புதிய வாய்ப்புகளை உருவாக்கவும், இதுவரை அடைந்துள்ள இந்த முன்னேற்றத்தை மேலும் வலுப்படுத்த நாங்கள் உறுதியுடன் உள்ளோம்.” – என்றுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இந்தியா – இலங்கை நட்புறவு மற்றும் பரஸ்பர புரிந்துணர்வை வலுப்படுத்தும் நோக்கில் ‘மைத்திரி சேது யாத்திரை 2027’

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான நீண்டகால நட்புறவு, பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்பை இளைய தலைமுறையினூடாக மேலும் வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இந்தியா – இலங்கை தேசிய…

123 0 0
இலங்கை செய்திகள்

ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தியே தனித்த கட்சி உருவாகக் காரணம் – காதர் மஸ்தான்

ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தி உள்ளிட்ட பல்வேறு காரணங்களே தனித்த அரசியல் கட்சியை உருவாக்க வேண்டிய சூழலை ஏற்படுத்தியதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர்…

128 0 0
இலங்கை செய்திகள்

ஹட்டன் நகரில் தொடர் கொள்ளை!

இன்று காலை (22) ஹட்டன் நகரில் உள்ள பின் சாலையில் அமைந்துள்ள 4 கடைகளில் திருடன் புகுந்துள்ளதாக ஹட்டன் காவல்துறை தெரிவித்துள்ளது. தங்கப் பொருட்கள் தயாரிக்கும் 3…

120 0 0
இலங்கை செய்திகள்

மல்வத்தை கோர விபத்து: தீவிர சிகிச்சை பெற்று வந்த மற்றைய இளைஞரும் உயி@ரிழப்பு!

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தைப் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை (20) மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் லொறி ஆகியன மோதிய கோர விபத்தில்…

131 0 0