உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
22 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

கடல் மார்க்கமாக கடத்த முயன்ற தங்கம்; நால்வர் கைது.!

இலங்கை செய்திகள் 4 நாட்கள் முன்
105 பார்வைகள்

இலங்கை கடற்படையினரால் நேற்று தலைமன்னார் பேசாலை மற்றும் புத்தளம் உச்சிமுனை கடற்பரப்பிற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட இருவேறு விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போது, கடல் மார்க்கமாகக் கடத்த முயன்ற 4 கிலோகிராமுக்கும் அதிகமான தங்கத்துடன் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், 2 டிங்கி படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், மீட்கப்பட்ட தங்கத்தின் பெறுமதி சுமார் 160 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தங்கத்தை கடல் மார்க்கமாக தென்னிந்தியாவிற்குக் கொண்டு செல்ல முயற்சித்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

வடமத்திய கடற்படைக் கட்டளை பிரிவுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, தலைமன்னார் வடக்குக் கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது, சந்தேகத்துக்கிடமான முறையில் பயணித்த டிங்கி படகொன்று சோதனையிடப்பட்டது.

குறித்த படகில் மணல் சாக்குக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் ஒரு கிலோகிராம் 410 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டது.

இதனுடன் தொடர்புடைய 25 மற்றும் 28 வயதுடைய பேசாலைப் பகுதியைச் சேர்ந்த 2 சந்தேகநபர்கள் டிங்கி படகொன்றுடன் கைது செய்யப்பட்டு மேலதிக நடவடிக்கைகளுக்காக காங்கேசன்துறை பிரதி சுங்கப் பணிப்பாளர் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, வடமேற்கு கடற்படைக் கட்டளை பிரிவுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, புத்தளம் உச்சிமுனை கடற்பரப்பில் ​நேற்றிரவு விசேட தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது குறித்த பகுதியில் சோதனையிடப்பட்ட டிங்கி படகின் எரிபொருள் கொள்கலனுக்குள் சூட்சுமமாக மறைத்து வைத்து கடத்தப்பட்ட சுமார் 3 கிலோகிராம் 25 கிராம் தங்கம் மீட்கப்பட்டது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 40 மற்றும் 50 வயதுடைய கற்பிட்டிப் பகுதியைச் சேர்ந்த 2 சந்தேகநபர்கள், டிங்கி படகுடன் கைது செய்யப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகக் கட்டுநாயக்க சுங்க அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இந்தியா – இலங்கை நட்புறவு மற்றும் பரஸ்பர புரிந்துணர்வை வலுப்படுத்தும் நோக்கில் ‘மைத்திரி சேது யாத்திரை 2027’

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான நீண்டகால நட்புறவு, பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்பை இளைய தலைமுறையினூடாக மேலும் வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இந்தியா – இலங்கை தேசிய…

128 0 0
இலங்கை செய்திகள்

ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தியே தனித்த கட்சி உருவாகக் காரணம் – காதர் மஸ்தான்

ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தி உள்ளிட்ட பல்வேறு காரணங்களே தனித்த அரசியல் கட்சியை உருவாக்க வேண்டிய சூழலை ஏற்படுத்தியதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர்…

131 0 0
இலங்கை செய்திகள்

ஹட்டன் நகரில் தொடர் கொள்ளை!

இன்று காலை (22) ஹட்டன் நகரில் உள்ள பின் சாலையில் அமைந்துள்ள 4 கடைகளில் திருடன் புகுந்துள்ளதாக ஹட்டன் காவல்துறை தெரிவித்துள்ளது. தங்கப் பொருட்கள் தயாரிக்கும் 3…

123 0 0
இலங்கை செய்திகள்

மல்வத்தை கோர விபத்து: தீவிர சிகிச்சை பெற்று வந்த மற்றைய இளைஞரும் உயி@ரிழப்பு!

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தைப் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை (20) மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் லொறி ஆகியன மோதிய கோர விபத்தில்…

131 0 0