உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
22 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஆனந்த பாலிதவின் கைது நியாயமானது.!

இலங்கை செய்திகள் 4 நாட்கள் முன்
112 பார்வைகள்

தொழிற்சங்கத் தலைவர் ஆனந்த பாலித கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை கருத்துகளை முன்வைத்த நிலையில், திருடர்களுக்கு ஆதரவாகப் பேசுவது வேதனையளிக்கின்றது என்று துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் மற்றும் வலுசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தின்போது கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்து உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொழிற்சங்கத் தலைவர் ஆனந்த பாலித கைது செய்யப்பட்டமைக்கான காரணம் குறித்து ஆராய்ந்தபோது, 36 இலட்சம் ரூபாய் நிதி மோசடி தொடர்பான குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளமை தெளிவாகத் தெரியவந்துள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

“திருடர்களுக்கு ஆதரவாகப் பேசுவது நமது பௌத்த தர்மத்துக்கோ அல்லது தார்மீக விழுமியங்களுக்கோ பொருத்தமானதல்ல என்பதை எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மறந்துவிட்டனர் என்று தெரிகின்றது. அதனை நினைக்கும்போது மனதுக்கு மிகவும் வேதனையாகவுள்ளது.” – என்றும் அவர் தெரிவித்தார்.

நாட்டில் சட்டத்தின் ஆட்சி முழுமையாக நிலைநாட்டப்பட வேண்டுமானால், குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதை அனைவரும் மதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இந்தியா – இலங்கை நட்புறவு மற்றும் பரஸ்பர புரிந்துணர்வை வலுப்படுத்தும் நோக்கில் ‘மைத்திரி சேது யாத்திரை 2027’

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான நீண்டகால நட்புறவு, பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்பை இளைய தலைமுறையினூடாக மேலும் வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இந்தியா – இலங்கை தேசிய…

129 0 0
இலங்கை செய்திகள்

ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தியே தனித்த கட்சி உருவாகக் காரணம் – காதர் மஸ்தான்

ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தி உள்ளிட்ட பல்வேறு காரணங்களே தனித்த அரசியல் கட்சியை உருவாக்க வேண்டிய சூழலை ஏற்படுத்தியதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர்…

132 0 0
இலங்கை செய்திகள்

ஹட்டன் நகரில் தொடர் கொள்ளை!

இன்று காலை (22) ஹட்டன் நகரில் உள்ள பின் சாலையில் அமைந்துள்ள 4 கடைகளில் திருடன் புகுந்துள்ளதாக ஹட்டன் காவல்துறை தெரிவித்துள்ளது. தங்கப் பொருட்கள் தயாரிக்கும் 3…

123 0 0
இலங்கை செய்திகள்

மல்வத்தை கோர விபத்து: தீவிர சிகிச்சை பெற்று வந்த மற்றைய இளைஞரும் உயி@ரிழப்பு!

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தைப் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை (20) மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் லொறி ஆகியன மோதிய கோர விபத்தில்…

131 0 0