உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
22 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

நாமல் ராஜபக்ஷ தலைமையில் ‘மொட்டு’ ஆட்சி மீண்டும் மலரும்.!

இலங்கை செய்திகள் 4 நாட்கள் முன்
99 பார்வைகள்

நாமல் ராஜபக்ஷ தலைமையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆட்சி மீண்டும் மலரும் என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் தெரிவித்தார்.

தாம் வழங்கிய தேர்தல் வாக்குறுதிகளில் நூறு சதவீதத்தையும் நிறைவேற்றிய ஒரே தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மட்டுமே என்றும், ஆனால் பொய்களின் மூலம் நாட்டை அழிக்கும் ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க தற்போது உருவாகியுள்ளார் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,
“கொழும்பு மேற்கு தேர்தல் தொகுதி ஒரு காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் பலமான கோட்டையாக விளங்கியது. முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவின் அரசியல் தொகுதியான அங்கு, கடந்த தேர்தலில் அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி வெற்றிபெற்றது. இதன்மூலம் மக்களை எந்தளவுக்குப் பொய்களை நம்பவைத்து ஏமாற்றியுள்ளனர் என்பது தெளிவாகின்றது.

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிப் பொறுப்பை ஏற்றபோது சுமார் 30 ஆண்டுகளாக நீடித்த யுத்தம் நாட்டில் இடம்பெற்றுக்கொண்டிருந்தது. அந்த யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்ததுடன், துறைமுகங்கள், விமான நிலையங்கள், நெடுஞ்சாலைகள், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களையும் அவர் முன்னெடுத்தார். ஆனால், அவரைத் திருடன் எனச் சித்திரித்து மக்களின் மனங்களில் தவறான எண்ணங்களை ஏற்படுத்தித் தோற்கடித்தனர்.

கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின்னர் கொவிட் பெருந்தொற்று ஏற்பட்டது. மக்களின் உயிர்களைக் காப்பாற்றுவதற்காக இரண்டு ஆண்டுகள் நாட்டை முடக்க வேண்டியிருந்ததால் அரசின் வருமான வழிகள் பாதிக்கப்பட்டு எரிபொருள், மின்சாரம், எரிவாயு விநியோகத்துக்கான நிதித் தட்டுப்பாடு ஏற்பட்டது.

அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக முன்னைய தலைவர்கள் தேர்தல் வாக்குறுதிகளை வழங்கியிருந்தாலும், அவற்றை நூறு சதவீதம் நிறைவேற்றிய ஒரே தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மட்டுமே. அநுரகுமார திஸாநாயக்க நாடு முழுவதும் கூட்டங்களை நடத்தி குளங்கள், பாடசாலைகள், பல்கலைக்கழகங்களை நிர்மாணிப்பதாக மக்களுக்கு வாக்குறுதியளித்தார். ஆனால், சமர்ப்பிக்கப்பட்ட வரவு – செலவுத் திட்டத்தில் அவற்றுக்காக ஒரு சதமேனும் ஒதுக்கப்படவில்லை.

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியிலிருந்து விலகிய காலத்தில் நாட்டின் வறுமை விகிதம் ஆறு சதவீதமாக இருந்தது. தற்போது அது 16 சதவீதமாக அதிகரித்துள்ளது. நாட்டில் சட்டம் ஒழுங்கும் சீர்குலைந்துள்ளது. நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக ஏற்றுக்கொள்ளக்கூடிய சாட்சியங்கள் இன்றி அவரைச் சிறையில் தடுத்து வைத்திருப்பது அரசியல் பழிவாங்கலாகும்.

நாட்டின் வறுமையை அதிகரிப்பதும், சட்டமின்மையை உருவாக்குவதும், முதலீடுகளைப் பாதிப்பதும் தற்போதைய ஆட்சியின் விளைவுகளாகும். அனைவரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் மீண்டும் ஒன்றிணைந்து நாட்டை அபிவிருத்திப் பாதையில் கொண்டுசெல்ல வேண்டும். எதிர்காலப் பொருளாதாரத்தையும், புதிய உலகின் தொழில்நுட்ப மாற்றங்களையும் புரிந்துகொள்ளக்கூடிய தலைமைத்துவத்தை வழங்கக்கூடியவராக நாமல் ராஜபக்ஷ விளங்குகின்றார். எனவே, நாமல் ராஜபக்ஷ தலைமையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆட்சி மீண்டும் மலரும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இந்தியா – இலங்கை நட்புறவு மற்றும் பரஸ்பர புரிந்துணர்வை வலுப்படுத்தும் நோக்கில் ‘மைத்திரி சேது யாத்திரை 2027’

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான நீண்டகால நட்புறவு, பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்பை இளைய தலைமுறையினூடாக மேலும் வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இந்தியா – இலங்கை தேசிய…

129 0 0
இலங்கை செய்திகள்

ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தியே தனித்த கட்சி உருவாகக் காரணம் – காதர் மஸ்தான்

ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தி உள்ளிட்ட பல்வேறு காரணங்களே தனித்த அரசியல் கட்சியை உருவாக்க வேண்டிய சூழலை ஏற்படுத்தியதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர்…

132 0 0
இலங்கை செய்திகள்

ஹட்டன் நகரில் தொடர் கொள்ளை!

இன்று காலை (22) ஹட்டன் நகரில் உள்ள பின் சாலையில் அமைந்துள்ள 4 கடைகளில் திருடன் புகுந்துள்ளதாக ஹட்டன் காவல்துறை தெரிவித்துள்ளது. தங்கப் பொருட்கள் தயாரிக்கும் 3…

123 0 0
இலங்கை செய்திகள்

மல்வத்தை கோர விபத்து: தீவிர சிகிச்சை பெற்று வந்த மற்றைய இளைஞரும் உயி@ரிழப்பு!

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தைப் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை (20) மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் லொறி ஆகியன மோதிய கோர விபத்தில்…

131 0 0