சாஃப் கால்பந்துத் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை
பங்களாதேஷின் டாக்காவில் நடைபெற்று வரும் சாஃப் கால்பந்துத் தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் தகுதி பெற்றுள்ளன.
நேற்று (14) நடைபெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் பூட்டான் அணியைத் தோற்கடித்து இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.
இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் போட்டியை நடத்தும் பங்களாதேஷ் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய பாகிஸ்தான் அணியும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.
இதன்படி, இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் சாஃப் கால்பந்துத் தொடரின் இறுதிப் போட்டி எதிர்வரும் 17ஆம் திகதி டாக்காவில் நடைபெறவுள்ளது.


