உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
22 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

பட்ஜட்டில் முன்வைக்கப்படும் திட்டங்களை நடைமுறையில் செய்து காட்ட வேண்டும்.!

இலங்கை செய்திகள் 6 நாட்கள் முன்
123 பார்வைகள்

வரவு – செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களை வெறும் புள்ளிவிவரங்களுக்குள் மாத்திரம் சுருக்காமல், நடைமுறை ரீதியாக அவற்றை நிறைவேற்றிக் காட்ட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தினார்.

பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ‘கெதெல்ல’ வீடமைப்பு மற்றும் நிர்மாணத் துறை கண்காட்சியைப் பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாட்டின் வீடமைப்பு நிர்மாணத்துறையை மேம்படுத்துவதற்குக் காலத்துக்கு ஏற்ற கண்காட்சியாக ‘கெதெல்ல’ கண்காட்சி விளங்குகின்ற போதிலும், இம்முறை இதனைப் பார்வையிட வருகை தந்த நுகர்வோரின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது. பொதுமக்களின் கைகளில் புழங்கும் பணம் இன்மையும், பொருளாதாரச் சுருக்கமுமே இதற்குப் பிரதான காரணமாகும்.

மொத்த உள்நாட்டு உற்பத்திக்குக் கணிசமான பக்கபலத்தை வழங்கி, பல வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நிர்மாணத்துறை இன்று வீழ்ச்சியடைந்துள்ளது. வரவு – செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டாலும் இந்தத் துறையை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகள் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை.

நடப்பு மூலதனம் இன்மை, வெளிப்படைத்தன்மையற்ற கேள்விமனு நடைமுறைகள் மற்றும் புள்ளிவிவரங்களைக் கொண்ட வெற்று வாக்குறுதிகளால் மக்களுக்கு எவ்விதப் பலனும் கிடைப்பதில்லை.

வரவு – செலவுத் திட்டத்தில் நிர்மாணத்துறை தொடர்பில் வழங்கப்பட்ட இலக்குகளைக் குறுகிய கால, மத்திய கால மற்றும் நீண்ட கால இலக்குகளாகத் தெளிவுபடுத்தி, மக்களைத் திசைதிருப்பாமல் யதார்த்தபூர்வமாக இந்தத் துறையை ஊக்குவிக்க வேண்டும்.

அரசு மக்கள் மத்தியில் கூறியவற்றைச் செய்து காட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது. நிர்மாணிக்கப்படும் எனக் கூறப்பட்ட வீடுகள், பாலங்கள், வீதிகள் மற்றும் நிறுவனங்களை முறையாக அமைத்துக் காட்ட வேண்டும்.

சமகாலத்தில் சில நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டாலும் அவற்றுக்கான கொடுப்பனவுகள் வழங்கப்படாமலும் தாமதங்கள் ஏற்படுவதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. சட்டக் கட்டமைப்பு பலப்படுத்தப்பட வேண்டும்.

வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். நாடு முன்னேறிச் செல்ல வேண்டுமானால் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கப்பட வேண்டும். பொருளாதார வளர்ச்சி ஏற்படுகின்ற போதே மக்களுக்குத் தேவையான சிறந்த வாழ்க்கைத் தரத்தை உருவாக்க முடியும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தொல். திருமாவளவனுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகளால் நூல்கள் வழங்கி வைப்பு!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் அவர்களுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகளால் நூல்கள் அடங்கிய தொகுதி ஒன்று வழங்கி வைக்கப்பட்டது.…

1 0 0
இலங்கை செய்திகள்

திறைசேரி நிரம்பி வழிந்தாலும் மக்கள் கையில் பணம் இல்லை : சஜித் விசனம்!

“திறைசேரி நிரம்பினாலும் மக்கள் கையில் பணம் நிரம்பவில்லை. மக்களிடம் பணப்புழக்கம் இல்லாமை பாரிய பிரச்சினையாகக் காணப்படுகின்றது” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். கொழும்பு பண்டாரநாயக்க…

121 0 0
இலங்கை செய்திகள்

இந்தியா – இலங்கை நட்புறவு மற்றும் பரஸ்பர புரிந்துணர்வை வலுப்படுத்தும் நோக்கில் ‘மைத்திரி சேது யாத்திரை 2027’

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான நீண்டகால நட்புறவு, பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்பை இளைய தலைமுறையினூடாக மேலும் வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இந்தியா – இலங்கை தேசிய…

132 0 0
இலங்கை செய்திகள்

ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தியே தனித்த கட்சி உருவாகக் காரணம் – காதர் மஸ்தான்

ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தி உள்ளிட்ட பல்வேறு காரணங்களே தனித்த அரசியல் கட்சியை உருவாக்க வேண்டிய சூழலை ஏற்படுத்தியதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர்…

134 0 0