உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
22 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

கொழும்பு கிரீன் பாத் பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று தீப்பிடித்து முற்றாக நாசம்!

இலங்கை செய்திகள் 1 வாரம் முன்
110 பார்வைகள்

கொழும்பு – கிரீன் பாத் (ஆனந்த குமாரசுவாமி மாவத்தை) பகுதியில் இன்று (15) நண்பகல் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரவண்டியொன்று திடீரெனத் தீப்பிடித்து எரிந்துள்ளது.

தீ விபத்து குறித்துத் தகவல் கிடைத்ததும் கொழும்பு மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அணைத்துள்ளனர்.

எனினும், தீயணைப்புப் படையினர் தீயை முழுமையாக அணைப்பதற்கு முன்னரே குறித்த முச்சக்கரவண்டி தீயினால் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.
இந்த அனர்த்தத்தில் முச்சக்கரவண்டி முழுமையாகச் சேதமடைந்துள்ள போதிலும், சாரதிக்கோ அல்லது அருகில் இருந்த பொதுமக்களுக்கோ எவ்வித உயிர்ச் சேதங்களோ அல்லது காயங்களோ ஏற்படவில்லை என ஆரம்பகட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முச்சக்கரவண்டியில் ஏற்பட்ட திடீர் மின் ஒழுக்கு அல்லது எரிபொருள் கசிவு காரணமாக இந்தத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் நிலையில், இச்சம்பவம் தொடர்பில் கறுவாத்தோட்டம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தொல். திருமாவளவனுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகளால் நூல்கள் வழங்கி வைப்பு!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் அவர்களுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகளால் நூல்கள் அடங்கிய தொகுதி ஒன்று வழங்கி வைக்கப்பட்டது.…

115 0 0
இலங்கை செய்திகள்

திறைசேரி நிரம்பி வழிந்தாலும் மக்கள் கையில் பணம் இல்லை : சஜித் விசனம்!

“திறைசேரி நிரம்பினாலும் மக்கள் கையில் பணம் நிரம்பவில்லை. மக்களிடம் பணப்புழக்கம் இல்லாமை பாரிய பிரச்சினையாகக் காணப்படுகின்றது” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். கொழும்பு பண்டாரநாயக்க…

122 0 0
இலங்கை செய்திகள்

இந்தியா – இலங்கை நட்புறவு மற்றும் பரஸ்பர புரிந்துணர்வை வலுப்படுத்தும் நோக்கில் ‘மைத்திரி சேது யாத்திரை 2027’

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான நீண்டகால நட்புறவு, பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்பை இளைய தலைமுறையினூடாக மேலும் வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இந்தியா – இலங்கை தேசிய…

132 0 0
இலங்கை செய்திகள்

ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தியே தனித்த கட்சி உருவாகக் காரணம் – காதர் மஸ்தான்

ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தி உள்ளிட்ட பல்வேறு காரணங்களே தனித்த அரசியல் கட்சியை உருவாக்க வேண்டிய சூழலை ஏற்படுத்தியதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர்…

134 0 0