உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
22 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

மக்கள் நிராகரித்தால் வீடு செல்லத் தயார்! : அமைச்சர் லால்காந்த அதிரடி!!

இலங்கை செய்திகள் 1 வாரம் முன்
116 பார்வைகள்

“நாட்டு மக்களை அடக்கி ஆண்டு ஆட்சியைத் தக்கவைக்கும் எண்ணம் எமக்குக் கிடையாது. மக்கள் எம்மை நிராகரித்தால், அந்த ஜனநாயக முடிவை ஏற்று எந்த நேரத்திலும் வீடு திரும்புவதற்குத் தயாராகவே இருக்கின்றோம்” என்று அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்தார்.

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம் ஆகியன அடக்குமுறைச் சட்டங்களாகும் என்றும், ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்வதற்காகவே அரசு இவற்றைக் கொண்டுவருவதாகவும் எதிரணிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அமைச்சர் கே.டி.லால்காந்த மேலும் கூறுகையில்,

“நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நாம் படிப்படியாக நிறைவேற்றி வருகின்றோம். எனவே, ஆட்சிக்கு வந்தபோது இருந்ததைவிட தற்போது எமக்கான மக்கள் ஆதரவு மேலும் அதிகரித்துள்ளது. மேற்படி இரு சட்டமூலங்கள் தொடர்பில் போதிய தெளிவில்லாமலேயே சிலர் மாறுபட்ட கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

நாம் ஒருபோதும் மக்களை அடக்கி ஆள முற்படமாட்டோம். அவ்வாறு ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டிய தேவையும் எமக்கு இல்லை. தேர்தல் மூலம் மக்கள் எம்மை நிராகரித்தால், எந்நேரத்திலும் ஆட்சியிலிருந்து விலகி வீடு திரும்பத் தயாராகவே இருந்து நாம் சேவையாற்றி வருகின்றோம். எந்நாளும் ஆட்சியில் ஒட்டிக்கொண்டிருக்க வேண்டும் என்ற குறுகிய மனப்பான்மை எமக்குக் கிடையாது. கடந்தகால ஆட்சியாளர்களிடம் மாத்திரமே அவ்வாறான எண்ணம் இருந்தது.” – என்றார்.

தொழிற்சங்கங்களின் எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்துக் கருத்துத் தெரிவித்த அமைச்சர், “தொழிற்சங்கங்கள் தமது இருப்பைத் தக்கவைத்துக்கொள்வதற்காக ஏதேனும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியிருப்பதை நாம் நன்கு அறிவோம். நாமும் தொழிற்சங்கப் போராட்டங்களில் இருந்தவர்கள்தான். எனவே, ஆங்காங்கே சிறுசிறு போராட்டங்கள் இடம்பெறலாம். ஆனால், நாம் ஆட்சிக்கு வந்த பின்னர் எந்தவொரு போராட்டத்துக்கும் எதிராகவும் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொண்டதில்லை.” – என்று சுட்டிக்காட்டினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தொல். திருமாவளவனுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகளால் நூல்கள் வழங்கி வைப்பு!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் அவர்களுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகளால் நூல்கள் அடங்கிய தொகுதி ஒன்று வழங்கி வைக்கப்பட்டது.…

115 0 0
இலங்கை செய்திகள்

திறைசேரி நிரம்பி வழிந்தாலும் மக்கள் கையில் பணம் இல்லை : சஜித் விசனம்!

“திறைசேரி நிரம்பினாலும் மக்கள் கையில் பணம் நிரம்பவில்லை. மக்களிடம் பணப்புழக்கம் இல்லாமை பாரிய பிரச்சினையாகக் காணப்படுகின்றது” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். கொழும்பு பண்டாரநாயக்க…

122 0 0
இலங்கை செய்திகள்

இந்தியா – இலங்கை நட்புறவு மற்றும் பரஸ்பர புரிந்துணர்வை வலுப்படுத்தும் நோக்கில் ‘மைத்திரி சேது யாத்திரை 2027’

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான நீண்டகால நட்புறவு, பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்பை இளைய தலைமுறையினூடாக மேலும் வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இந்தியா – இலங்கை தேசிய…

132 0 0
இலங்கை செய்திகள்

ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தியே தனித்த கட்சி உருவாகக் காரணம் – காதர் மஸ்தான்

ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தி உள்ளிட்ட பல்வேறு காரணங்களே தனித்த அரசியல் கட்சியை உருவாக்க வேண்டிய சூழலை ஏற்படுத்தியதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர்…

134 0 0