உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
22 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

மக்களால் நிராகரிக்கப்பட்டோர் திசை தெரியாமல் தடுமாற்றம்.!

இலங்கை செய்திகள் 1 வாரம் முன்
137 பார்வைகள்

ஆட்சியாளர்களுக்குப் பயந்து வாழ்ந்த சமூகத்துக்குப் பதிலாக, ஆட்சியாளர்களைத் துணிச்சலுடன் கேள்வி கேட்கும் மற்றும் ஆக்கபூர்வமாக விமர்சிக்கும் புதிய சமூகமொன்றைக் கட்டியெழுப்புவதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பு விகாரமாதேவி திறந்தவெளி அரங்கில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற 37ஆவது ‘கார்த்திகை வீரர்கள்’ நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட மக்கள் விடுதலை முன்னணியின் சிரேஷ்ட தலைவர்கள், வீரர் நினைவுச் சின்னத்தில் தீபமேற்றி மலரஞ்சலி செலுத்தியதைத் தொடர்ந்து இந்த நினைவேந்தல் நிகழ்வு ஆரம்பமானது.

இதன்போது, மக்களால் நிராகரிக்கப்பட்டுத் தோல்வியடைந்த பலவீனமான அரசியல் அணிகள் தற்போது திசைதெரியாமல் தடுமாறி வருவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அவ்வாறான தரப்பினர் முன்னெடுக்கும் எதிர்ப்புப் போராட்டங்கள் நாட்டின் முன்னேற்றத்திற்குப் பாதகமானவை என்றும் சுட்டிக்காட்டினார்.

நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவிக்கையில்,
“அடக்குமுறைகளுக்கு முகங்கொடுத்தபோது ஆயுதம் ஏந்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட வரலாறு எமக்கு இருக்கின்றது. இவ்வாறான பல்வேறு நெருக்கடியான சூழ்நிலைகளுக்கு முகங்கொடுத்த ஓர் அரசியல் இயக்கம் உலகிலோ அல்லது இலங்கையிலோ வேறெங்கும் இல்லை.

கடந்த 61 ஆண்டுகளில் எத்தனையோ திருப்பங்கள், மாற்றங்கள் மற்றும் பல்வேறு வடிவங்களிலான சவால்களுக்கு நாம் முகங்கொடுத்துள்ளோம். அந்தச் சவால்களின் தன்மைகள் காலத்திற்குக் காலம் மாறியிருந்தாலும், எமது முழு வரலாற்றையும் ஒன்றிணைக்கும் ஒரு அடிப்படையான நோக்கம் உள்ளது. எமது அரசியல் இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளை மாற்றாமல் நாம் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்கின்றோம்.

1988 – 1989 காலப்பகுதியில் அன்றைய ஆட்சியாளர்களால் எமது சகோதரர்கள் பறிக்கப்பட்டதற்கும் அந்த உயரிய நோக்கமே காரணமாக அமைந்தது.

எமது நாட்டுக்கும் மக்களுக்கும் சிறந்ததொரு சமூகத்தைக் கட்டியெழுப்புவது அன்றிலிருந்து எமது பிரதான இலக்குகளில் ஒன்றாக இருந்து வருகின்றது. ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின்னரும் நாம் கைவிடாத இலக்கு நீதியான சமூகமொன்றைக் கட்டியெழுப்புவதாகும். அந்த இலக்கை முழுமையாக அடைவதற்காக நாம் இன்றும் போராடிக் கொண்டிருக்கின்றோம்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தொல். திருமாவளவனுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகளால் நூல்கள் வழங்கி வைப்பு!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் அவர்களுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகளால் நூல்கள் அடங்கிய தொகுதி ஒன்று வழங்கி வைக்கப்பட்டது.…

118 0 0
இலங்கை செய்திகள்

திறைசேரி நிரம்பி வழிந்தாலும் மக்கள் கையில் பணம் இல்லை : சஜித் விசனம்!

“திறைசேரி நிரம்பினாலும் மக்கள் கையில் பணம் நிரம்பவில்லை. மக்களிடம் பணப்புழக்கம் இல்லாமை பாரிய பிரச்சினையாகக் காணப்படுகின்றது” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். கொழும்பு பண்டாரநாயக்க…

125 0 0
இலங்கை செய்திகள்

இந்தியா – இலங்கை நட்புறவு மற்றும் பரஸ்பர புரிந்துணர்வை வலுப்படுத்தும் நோக்கில் ‘மைத்திரி சேது யாத்திரை 2027’

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான நீண்டகால நட்புறவு, பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்பை இளைய தலைமுறையினூடாக மேலும் வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இந்தியா – இலங்கை தேசிய…

132 0 0
இலங்கை செய்திகள்

ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தியே தனித்த கட்சி உருவாகக் காரணம் – காதர் மஸ்தான்

ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தி உள்ளிட்ட பல்வேறு காரணங்களே தனித்த அரசியல் கட்சியை உருவாக்க வேண்டிய சூழலை ஏற்படுத்தியதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர்…

134 0 0