உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
14 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

கந்தப்பளை தோட்ட மக்களின் குடிநீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு!

இலங்கை செய்திகள் 9 மணி நேரம் முன்
93 பார்வைகள்

கந்தப்பளை கோணப்பிட்டிய தோட்டம், மெரிகோல்ட் பிரிவில் வாழும் மக்களுக்கான புனரமைக்கப்பட்ட சமூக நீர் வழங்கல் திட்டம் இன்று (12) உத்தியோகபூர்வமாக மக்கள் பாவனைக்காகக் கையளிக்கப்பட்டுள்ளது.

டிட்வா அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு மீண்டெழ முயற்சிக்கும் தோட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதுடன், அவர்களுக்கான அடிப்படை வசதிகளை மீளமைக்கும் நோக்கில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நம்பகமான குடிநீர் வசதியை மீண்டும் உறுதிப்படுத்துவதன் மூலம், குடும்பங்களின் அன்றாட நீர்த் தேவைகளைப் பூர்த்தி செய்வதுடன், நீண்டகால சமூக மறுமலர்ச்சிக்கும் இத்திட்டம் வலுசேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜப்பான் அரசாங்கத்தின் நிதியுதவியுடன், சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் (ILO) ஊடாக இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஊவா சக்தி மன்றத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட இத்திட்டம், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நம்பிக்கை நிதியம் (PHDT) மற்றும் பிரவுன்ஸ் பிளான்டேஷன்ஸ் – மதுரட்ட ஆகிய நிறுவனங்களின் ஒத்துழைப்புடன், சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் வேலைவாய்ப்பு தீவிர முதலீட்டுத் திட்டத்தின் (Employment Intensive Investment Programme) கீழ் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான நாட்டுப் பணிப்பாளர் திருமதி ஜோனி சிம்ப்சன், தெற்காசியாவுக்கான வேலைவாய்ப்பு தீவிர முதலீடுகள் தொடர்பான சிரேஷ்ட நிபுணர் தோமஸ் டி. ஸ்டென்ஸ்ட்ரோம், சிரேஷ்ட நிகழ்ச்சித் திட்ட உதவியாளர் பிரசாந்த செனரத் உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

மேலும், சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் பிரதிநிதி திருமதி சத்துரிகா, பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நம்பிக்கை நிதியத்தின் பிரதிநிதி தேவரஞ்சன் மற்றும் ஊவா சக்தி மன்றத்தின் பிரதிநிதி நடேசன் சுரேஷ் உள்ளிட்டோரும் நிகழ்வில் பங்கேற்றனர்.

இத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்குப் பங்களிப்பு வழங்கிய ஜப்பான் அரசாங்கம், சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம், பங்காளி நிறுவனங்கள், தோட்ட நிர்வாகம் மற்றும் சமூகப் பிரதிநிதிகள் ஆகியோருக்கு இதன்போது நன்றிகள் தெரிவிக்கப்பட்டன.

அடிப்படை நீர் வசதியை மீளமைப்பது மட்டுமன்றி, மக்களின் நம்பிக்கையையும் எதிர்காலத்தையும் கட்டியெழுப்பும் முயற்சியாக இத்திட்டம் அமைந்துள்ளதாக நிகழ்வில் வலியுறுத்தப்பட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சாவகச்சேரியில் பெரும் பதற்றம்! : போ@தையில் வாகனம் செலுத்தி இரு உயிர்களைப் பறித்த கொடூரம்: பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்!!

யாழ்ப்பாணம் – சாவகச்சேரிப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற கோர விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தையும் மகனும் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்தனர். சாவகச்சேரிப்…

96 0 0
இலங்கை செய்திகள்

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்: பொதுமக்களின் கருத்துக்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நிதி அமைச்சராக நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் குறித்து பொதுமக்கள் மற்றும் பல்வேறு துறைசார் பிரதிநிதிகள் தமது…

80 0 0
இலங்கை செய்திகள்

வரலாற்றில் முதன்முறையாக கல்விக்காக 749 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு!

2027ஆம் ஆண்டுக்கான பாதீட்டுத் திட்டத்தில் கல்வித்துறையின் மேம்பாட்டிற்காக வரலாற்றில் முதன்முறையாக 749 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகை ஒதுக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.  நாடாளுமன்றத்தில் 2027ஆம்…

99 0 0
இலங்கை செய்திகள்

சாட்டி துயிலுமில்லத்தில் மாவீரர் நினைவேந்தலுக்கு அனுமதிக்க வேண்டாம் – காணி உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

வழமையாக மாவீரர் நினைவேந்தல் இடம்பெறும் சாட்டி துயிலுமில்லத்தில் நினைவேந்தல் செய்ய அனுமதிக்க வேண்டாம் என கூறி காணியின் உரிமையாளர் இன்றையதினம் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு…

99 0 0