உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
21 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

சாய் கிஷோர் மீது ஆர்வம் காட்டும் சி.எஸ்.கே அணி!

111 பார்வைகள்

சிஎஸ்கே அணி தற்போது ஸ்பின்னர் ஒருவரை மட்டுமே டிரேட் செய்ய முயற்சித்து வருவது தெரிய வந்துள்ளது.

சிவம் துபே, டிவால்ட் பிரெவிஸ் என்று எந்த நட்சத்திர வீரர்களையும் விட்டுக் கொடுக்க சிஎஸ்கே விரும்பவில்லை. இதனால் சாய் கிஷோர் மீது மட்டுமே சிஎஸ்கே நிர்வாகம் கண் வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐபிஎல் மினி ஏலத்திற்கு முன் ஹர்திக் பாண்டியா டிரேட் வெற்றிகரமாக முடிவுக்கு வந்துள்ளது. மும்பை அணியின் தலைவர் ஹர்திக் பாண்டியாவை பஞ்சாப் அணியும், பஞ்சாப் அணியின் அர்ஷ்தீப் சிங்கை மும்பை அணியும் ஸ்வாப் செய்து கொண்டுள்ளன.

ஐபிஎல் வரலாற்றில் மிகப்பெரிய டிரேட் ஒப்பந்தமாக இது அமைந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து ராஜஸ்தான், லக்னோ, கேகேஆர் மற்றும் சிஎஸ்கே ஆகிய அணிகள் டிரேட் செய்ய முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதில் சிஎஸ்கே அணியின் எதிர்பார்ப்பு சிறிய அளவில் தான் இருக்கிறது.

உள்நாட்டு வீரர்களை விட்டுக் கொடுத்துவிட்டு, வேறொரு உள்நாட்டு வீரரை வாங்கும் வகையில் டிரேட் ஒப்பந்தம் செய்ய ஆர்வமாக உள்ளது.

அந்த வகையில் குஜராத் அணியிடம் சாய் கிஷோரை வாங்க சிஎஸ்கே பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. குஜராத் அணியில் சாய் கிஷோருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை. இதனால் சாய் கிஷோர் அதிருப்தியில் உள்ளார். மறுபக்கம் சிஎஸ்கே அணியால் உர்வில் படேலுக்கு முறையாக வாய்ப்பு அளிக்க முடியவில்லை.

இதனால் இரு தரப்பிலும் டிரேட் செய்ய பேச்சுகள் தொடர்கிறது. குஜராத் அணி நிர்வாகம் சாய் கிஷோரை விட்டுக் கொடுக்க விரும்பவில்லை. ஆனால் சாய் கிஷோர் குஜராத் அணியில் இருந்து ரிலீஸ் கேட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ரிலீஸ் செய்வதால், குஜராத் அணிக்கு எந்த லாபமும் இல்லை. இதனால் டிரேட்டில் வேறொரு வீரரை கைப்பற்ற குஜராத் அணி நிர்வாகம் ஆலோசிப்பதாக தெரிகிறது.

ஒருவேளை சாய் கிஷோர் டிரேட் கைகூடவில்லை என்றால், ஐதராபாத் அணியின் சலீல் அரோரா அல்லது அனிகேத் வர்மா மீது சிஎஸ்கே நிர்வாகம் கண் வைத்துள்ளது. இருவருமே ஃபினிஷிங் ரோலில் ஆடக் கூடியவர்கள். லிவிங்ஸ்டனுக்கு பின் களமிறங்க ஒரு ஃபினிஷரின் தேவை சிஎஸ்கே அணிக்கு அவசியமாக உள்ளது. இதனால் இருவரில் ஒருவரை வாங்கவும் ஆர்வம் காட்டுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

3ஆம் நாள் ஆட்டம் நிறைவு: இலங்கை அணி 82 ஓட்டங்களால் முன்னிலை!

பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில், இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை இழந்து…

122 0 0
விளையாட்டுச் செய்திகள்

கால்பந்து வரலாற்றில் சர்வதேச மைல்கல்லைப் பதித்த டி.எப். சூடீன்!

90 ஆண்டுகளுக்கும் மேலான பெருமைமிக்க வரலாற்றைக் கொண்ட நுவரெலியா கால்பந்து விளையாட்டுத் துறையில், இதுவரை எட்டப்படாத ஒரு சர்வதேச மைல்கல்லை நிலைநாட்டி, நுவரெலியா கால்பந்து சங்கத்தின் கீழ்…

126 0 0
விளையாட்டுச் செய்திகள்

பங்களாதேஷ் விக்கெட் கீப்பர் லிட்டன்தாஸ் உலக சாதனை!

தென் ஆப்பிரிக்கா – பங்காளதேஷ் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்று வருகிறது. பங்காளதேஷ் முதல் இன்னிங்சில் 400 ஓட்டங்களை குவித்தது. இதற்கு…

152 0 0
விளையாட்டுச் செய்திகள்

மெதுவான பந்துவீச்சு : இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கு அபராதம்

ராவல்பிண்டியில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் மெதுவாகப் பந்து வீசிய குற்றச்சாட்டில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை அபராதம் விதித்துள்ளது. இதற்கமைய, பாகிஸ்தான்…

91 0 0