உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
22 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

வடக்கு மாகாண சபையிடமிருந்து 4 பிரதான வைத்தியசாலைகளைப் பிடுங்குகின்றது மத்திய அரசு.!

இலங்கை செய்திகள் 1 வாரம் முன்
132 பார்வைகள்

அரசமைப்பின் 13 ஆவது திருத்தம் மூலம் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட பிரதான அதிகாரங்களில் ஒன்றான சுகாதார – மருத்துவத்துறை தொடர்பான விடயத்தை வடக்கு மாகாண சபையிடமிருந்து மத்திய அரசுக்கு பிடுங்கி எடுக்கும் முக்கிய கொள்கை முடிவு ஒன்று பற்றிய விடயங்களை நிதி அமைச்சரான ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேற்று வரவு – செலவுத் திட்ட உரையில் வெளியிட்டிருக்கின்றார்.

வடக்கு மாகாண சபையின் நிர்வாகத்தில் இருக்கும் மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா ஆகிய பிரதான மருத்துவமனைகளை – மாவட்டப் பொது வைத்தியசாலைகளை – அபிவிருத்தி என்ற பெயரில் மத்திய அரசுக்கு மாற்றும் திட்டத்தை ஜனாதிபதி நேற்று தமது உரையில் வெளியிட்டிருக்கின்றார். 13ஆவது திருத்தத்தின் கீழ் இந்த விடயம் மாகாண சபைக்கு முழுமையாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு மருத்துவமனைகள், போதனா வைத்தியசாலைகள் என்ற பெயரில் மத்திய அரசினால் நிர்வகிக்கப்படுகின்றன.

வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் கீழ் உள்ள இந்த நான்கு வைத்தியசாலைகளையும் அபிவிருத்தி செய்து மேம்படுத்துவதற்கு மாகாண சபையிடம் போதிய நிதி இல்லை என்ற காரணத்தைக் காட்டி அந்த வைத்தியசாலைகளை மாகாண சபையிடமிருந்து பிடுங்கும் நடவடிக்கையை இப்போது தேசிய மக்கள் சக்தி அரசு முன்னெடுக்கின்றது.

வடக்கில் இந்த நான்கு வைத்தியசாலைகளுடன் கம்பஹா மற்றும் அவிசாவளையில் உள்ள இரண்டு வைத்தியசாலைகளும் மாகாண சபைகளிடமிருந்து மத்திய அரசுக்கு பாரதீனப்படுத்தப்படவிருக்கின்றன என்பது ஜனாதிபதியின் வரவு – செலவுத் திட்ட உரையிலிருந்து வெளிப்பட்டுள்ளது.

ஏற்கனவே மாகாணத்துக்கு ஒதுக்கப்பட்ட கல்வித்துறையின் கீழ் இருக்கும் பாடசாலைகளை ‘தேசிய பாடசாலைகள்’ என்ற பெயரில் மாகாண சபைகளிடமிருந்து பிடுங்கி மத்திய அரசுடன் இணைத்து வரும் கொழும்பு அதிகார பீடம் இப்போது வடக்கு வைத்தியசாலைகள் விடயத்திலும் தீர்க்கமான நகர்வை முன்னெடுக்கத் தொடங்கியுள்ளது.

இந்த வைத்தியசாலைகள் எல்லாம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வருமானால் அதன் பின்னர் மாகாணத்தில் உள்ள சில சிறிய வைத்தியசாலைகளையும் மருந்தகங்களையும்தான் சபை நிர்வகிக்க வேண்டிய நிலை வரும் என்று சுட்டிக்காட்டப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தொல். திருமாவளவனுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகளால் நூல்கள் வழங்கி வைப்பு!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் அவர்களுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகளால் நூல்கள் அடங்கிய தொகுதி ஒன்று வழங்கி வைக்கப்பட்டது.…

121 0 0
இலங்கை செய்திகள்

திறைசேரி நிரம்பி வழிந்தாலும் மக்கள் கையில் பணம் இல்லை : சஜித் விசனம்!

“திறைசேரி நிரம்பினாலும் மக்கள் கையில் பணம் நிரம்பவில்லை. மக்களிடம் பணப்புழக்கம் இல்லாமை பாரிய பிரச்சினையாகக் காணப்படுகின்றது” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். கொழும்பு பண்டாரநாயக்க…

127 0 0
இலங்கை செய்திகள்

இந்தியா – இலங்கை நட்புறவு மற்றும் பரஸ்பர புரிந்துணர்வை வலுப்படுத்தும் நோக்கில் ‘மைத்திரி சேது யாத்திரை 2027’

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான நீண்டகால நட்புறவு, பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்பை இளைய தலைமுறையினூடாக மேலும் வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இந்தியா – இலங்கை தேசிய…

133 0 0
இலங்கை செய்திகள்

ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தியே தனித்த கட்சி உருவாகக் காரணம் – காதர் மஸ்தான்

ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தி உள்ளிட்ட பல்வேறு காரணங்களே தனித்த அரசியல் கட்சியை உருவாக்க வேண்டிய சூழலை ஏற்படுத்தியதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர்…

135 0 0