பெண்ணொருவர் கொ**லை; சந்தேகநபர் கைது.!
நுவரெலியாவில் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர், நுவரெலியா பேருந்து நிலையத்திற்கு அருகில் வைத்து நேற்று (12) வியாழக்கிழமை இரவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் தேரிப்பஹ பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவர் ஆவார்.
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாகஸ்தொட்ட பகுதியில் அமைந்துள்ள தங்குமிடமொன்றில் கடந்த 10ஆம் திகதி பெண்ணொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸ் நிலையத்திற்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், சந்தேகநபர் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின்போது, அவர் கடந்த 10ஆம் திகதி தேரிப்பஹ பொலிஸ் பிரிவில் பொலிஸ் காவலில் இருந்து தப்பிச் சென்ற நிலையில் தேடப்பட்டு வந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் நுவரெலியா பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.


