உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
22 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

என்.பி.பியின் கொள்கைப் பிரகடன வாக்குறுதிகள் எங்கு சென்றன?

இலங்கை செய்திகள் 1 வாரம் முன்
119 பார்வைகள்

ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் வழங்கப்பட்ட கொள்கைப் பிரகடன வாக்குறுதிகள் மற்றும் கடந்த இரண்டு வரவு – செலவுத் திட்டங்களில் அளிக்கப்பட்ட எந்தவொரு வாக்குறுதியையும் அரசு இதுவரை நிறைவேற்றவில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா கடுமையாகக் குற்றம்சாட்டினார்.

எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கப்பலில் இருந்து இறக்கப்படும் விலைக்கு எரிபொருள் வழங்குவதாகவும், மின்சாரக் கட்டணத்தை 30 சதவீதத்தால் குறைப்பதாகவும் கூறப்பட்ட போதிலும் அவை எவையும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

அத்தியாவசிய உணவுப் பொருட்கள், பாடசாலை உபகரணங்கள், மருந்துகள் மற்றும் சுகாதார உபகரணங்கள் மீதான வற் வரியைக் குறைத்தல், அரச ஊழியர்களின் சம்பள உயர்வு மற்றும் 35 ஆயிரம் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குதல் போன்ற வாக்குறுதிகளையும் அரசு மறந்துவிட்டது.

அரச – தனியார் முதலீட்டுச் சட்டம், முதலீட்டுப் பாதுகாப்புச் சட்டம், புதிய வர்த்தக வணிக முகாமைத்துவச் சட்டம், தேசிய கணக்காய்வுச் சட்டத் திருத்தம், எரிசக்தி மாற்றச் சட்டம் மற்றும் டிஜிட்டல் சட்டம் ஆகியவை வெறும் அறிவிப்புகளுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

பணவீக்கம் 8-9 சதவீத மட்டத்தில் உள்ள நிலையில், அரசு வரியையும் பொருட்களின் விலைகளையும் அதிகரித்து மக்களைத் துன்புறுத்தித் திறைசேரியை நிரப்பிக் கொண்டிருக்கின்றது.

கடந்த வரவு – செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியில் 13 சதவீதத்தைக் கூட அரசு செலவிடவில்லை.

70 ஆண்டுகால சாபத்தை ஒழித்து ஊழல் மோசடிகளை இல்லாதொழிப்போம்” எனக் கூறி ஆட்சிக்கு வந்த அரசின் கீழும் பாரிய நிதி மோசடிகள் இடம்பெறுகின்றன.

சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்கள் தொடர்பான குழு அறிக்கை வெளியிடப்படாமை, திறைசேரியிலிருந்து 2.5 பில்லியன் டொலர்கள் காணாமல்போனமை மற்றும் தபால் திணைக்களத்தில் 6 இலட்சம் டொலர்கள் அஸ்தானகதமானமை குறித்து எவ்வித விசாரணைகளும் நடத்தப்படவில்லை.

18 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான நஷ்டத்தை ஏற்படுத்திய நிலக்கரி மோசடி மற்றும் டீசல் மின்நிலைய பராமரிப்பு நட்டம் குறித்துச் சம்பந்தப்பட்ட தரப்பினர் ஏற்றுக்கொண்ட போதிலும், இதுவரை சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை.” – என்றார்.

சபாநாயகர் விவகாரம் மற்றும் பல்வேறு தரப்பினரின் முறைகேடுகள் குறித்துக் குறிப்பிட்ட அவர், சட்டம் அனைவருக்கும் சமம் எனில் அரசு உடனடியாகச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதற்கிடையில், மத்திய கிழக்கில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அனோஜன் சிவராசாவை விடுவிப்பதற்கு அரசு மட்டுமன்றி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் ஏனைய தரப்பினரின் இராஜதந்திரத் தலையீடுகளும் காரணமாக அமைந்தன என்றும் அவர் குறிப்பிட்டார்.

அரசின் செயற்பாடுகளுக்கு எதிராக எதிர்வரும் வாரத்தில் நாடாளுமன்றத்துக்கு முன்பாக மாபெரும் போராட்டமொன்றை நடத்த ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

அரசு மக்களுக்கு நிவாரணங்களை வழங்கினால் மட்டுமே வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவளிப்பது குறித்தோ அல்லது பேச்சுகளில் பங்கேற்பது குறித்தோ பரிசீலிக்கப்படும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தொல். திருமாவளவனுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகளால் நூல்கள் வழங்கி வைப்பு!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் அவர்களுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகளால் நூல்கள் அடங்கிய தொகுதி ஒன்று வழங்கி வைக்கப்பட்டது.…

121 0 0
இலங்கை செய்திகள்

திறைசேரி நிரம்பி வழிந்தாலும் மக்கள் கையில் பணம் இல்லை : சஜித் விசனம்!

“திறைசேரி நிரம்பினாலும் மக்கள் கையில் பணம் நிரம்பவில்லை. மக்களிடம் பணப்புழக்கம் இல்லாமை பாரிய பிரச்சினையாகக் காணப்படுகின்றது” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். கொழும்பு பண்டாரநாயக்க…

127 0 0
இலங்கை செய்திகள்

இந்தியா – இலங்கை நட்புறவு மற்றும் பரஸ்பர புரிந்துணர்வை வலுப்படுத்தும் நோக்கில் ‘மைத்திரி சேது யாத்திரை 2027’

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான நீண்டகால நட்புறவு, பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்பை இளைய தலைமுறையினூடாக மேலும் வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இந்தியா – இலங்கை தேசிய…

133 0 0
இலங்கை செய்திகள்

ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தியே தனித்த கட்சி உருவாகக் காரணம் – காதர் மஸ்தான்

ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தி உள்ளிட்ட பல்வேறு காரணங்களே தனித்த அரசியல் கட்சியை உருவாக்க வேண்டிய சூழலை ஏற்படுத்தியதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர்…

135 0 0