உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
22 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

எதிர்க்கட்சிகளில் நிரம்பி வழியும் குற்றவாளிகள்.!

இலங்கை செய்திகள் 2 வாரங்கள் முன்
97 பார்வைகள்

நாட்டில் குற்றம் இழைத்தவர்கள்தான் புதிய சட்டமூலங்களைக் கண்டு அச்சமடைந்துள்ளனர் என்று தெரிவித்த அமைச்சர் கே.டி. லால் காந்த, அத்தகைய குற்றவாளிகள் தற்போது எதிர்க்கட்சிகளிலேயே நிரம்பி வழிகின்றார்கள் என்றும் கடுமையாகச் சாடினார்.

அத்தகைய சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டோர் – ஈடுபடுவோர் இனி எக்காலத்திலும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது என்றும், அவர்களுக்கு மிக விரைவில் தகுந்த தண்டனை கிடைக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.

தற்போதைய அரசின் கீழ் நாட்டின் நீதித்துறையும் நீதிமன்ற நடவடிக்கைகளும் எவ்வாறான வெளிப்புறத் தலையீடுகளுமின்றி முற்றிலும் சுயாதீனமாகவே இயங்கி வருகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசு நீதித்துறையின் செயற்பாடுகளில் ஒருபோதும் தலையிடாது என்றும், சட்டத்தின் ஆட்சி தனது வழியில் உறுதியாகப் பயணிக்கும் என்றும் அவர் மேலும் தெளிவுபடுத்தினார்.

நாட்டின் அமைதியையும் மக்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் நோக்கில் அரசு முன்னெடுக்கும் சட்ட நடவடிக்கைகளுக்குச் சில அரசியல் தரப்புகள் வேண்டுமென்றே அவதூறு பரப்பி வருகின்றன என்று குறிப்பிட்ட அவர், மக்கள் நலனைக் கருத்திற்கொண்டே புதிய சட்டமூலங்கள் கொண்டுவரப்படுகின்றன என்றும் தெரிவித்தார்.

கடந்தகாலத் தவறுகளிலிருந்து நாட்டை மீட்டுச் சரியான பாதையில் கொண்டு செல்லும் அரசின் பிரயத்தனங்களுக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்கள் தங்களது ஊழல்களை மறைக்க முற்படுகின்றனர் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

எதிர்க்கட்சிகளில் உள்ள சில நபர்கள் தங்களுக்கு எதிராகக் கொண்டுவரப்படலாம் என அஞ்சும் சட்டங்களைக் குறிப்பிட்டுப் பொய்ப் பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றனர் என்று தெரிவித்த அமைச்சர், குற்றவாளிகள் எவராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவது உறுதிப்படுத்தப்படும் என்றார்.

மக்களின் வரிப்பணத்தைக் கொள்ளையடித்தவர்கள் மற்றும் அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்தவர்கள் மீது பாரபட்சமின்றி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் சட்டத்தை எவரும் தமது சுயலாபத்துக்காக வளைக்க முடியாது என்று குறிப்பிட்ட அமைச்சர் கே.டீ.லால் காந்த, சுயாதீனமான நீதிமன்றங்களின் ஊடாக ஊழல்வாதிகளுக்கு உரிய தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும் வரை அரசு பின்வாங்கப் போவதில்லை என்றும் திட்டவட்டமாகக் கூறினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தொல். திருமாவளவனுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகளால் நூல்கள் வழங்கி வைப்பு!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் அவர்களுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகளால் நூல்கள் அடங்கிய தொகுதி ஒன்று வழங்கி வைக்கப்பட்டது.…

121 0 0
இலங்கை செய்திகள்

திறைசேரி நிரம்பி வழிந்தாலும் மக்கள் கையில் பணம் இல்லை : சஜித் விசனம்!

“திறைசேரி நிரம்பினாலும் மக்கள் கையில் பணம் நிரம்பவில்லை. மக்களிடம் பணப்புழக்கம் இல்லாமை பாரிய பிரச்சினையாகக் காணப்படுகின்றது” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். கொழும்பு பண்டாரநாயக்க…

127 0 0
இலங்கை செய்திகள்

இந்தியா – இலங்கை நட்புறவு மற்றும் பரஸ்பர புரிந்துணர்வை வலுப்படுத்தும் நோக்கில் ‘மைத்திரி சேது யாத்திரை 2027’

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான நீண்டகால நட்புறவு, பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்பை இளைய தலைமுறையினூடாக மேலும் வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இந்தியா – இலங்கை தேசிய…

134 0 0
இலங்கை செய்திகள்

ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தியே தனித்த கட்சி உருவாகக் காரணம் – காதர் மஸ்தான்

ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தி உள்ளிட்ட பல்வேறு காரணங்களே தனித்த அரசியல் கட்சியை உருவாக்க வேண்டிய சூழலை ஏற்படுத்தியதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர்…

136 0 0