உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
22 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

சம்மாந்துறை பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் நிறைவேற்றம்.!

இலங்கை செய்திகள் 2 வாரங்கள் முன்
113 பார்வைகள்

சம்மாந்துறை பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் 13 உறுப்பினர்களின் ஆதரவுடன் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சம்மாந்துறை பிரதேச சபையின் ஐந்தாவது கூட்டத்தொடரின் 17ஆவது அமர்வு சபை மண்டபத்தில் நேற்று (10) நடைபெற்றது.

இதன்போது 2027ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தவிசாளரினால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது.

சபையில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் 13 உறுப்பினர்கள் வரவு – செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். 6 உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்ததுடன், 2 உறுப்பினர்கள் எந்தத் தரப்பிற்கும் வாக்களிக்காமல் நடுநிலை வகித்தனர். இதனையடுத்து, 7 மேலதிக வாக்குகளால் 2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் சபையில் உத்தியோகபூர்வமாக நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது.

பிரதேசத்தின் அபிவிருத்தி மற்றும் சமூக நலன்புரிச் சேவைகளைக் கருத்திற் கொண்டு பல முக்கிய துறைகளுக்கு நிதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தொல். திருமாவளவனுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகளால் நூல்கள் வழங்கி வைப்பு!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் அவர்களுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகளால் நூல்கள் அடங்கிய தொகுதி ஒன்று வழங்கி வைக்கப்பட்டது.…

122 0 0
இலங்கை செய்திகள்

திறைசேரி நிரம்பி வழிந்தாலும் மக்கள் கையில் பணம் இல்லை : சஜித் விசனம்!

“திறைசேரி நிரம்பினாலும் மக்கள் கையில் பணம் நிரம்பவில்லை. மக்களிடம் பணப்புழக்கம் இல்லாமை பாரிய பிரச்சினையாகக் காணப்படுகின்றது” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். கொழும்பு பண்டாரநாயக்க…

128 0 0
இலங்கை செய்திகள்

இந்தியா – இலங்கை நட்புறவு மற்றும் பரஸ்பர புரிந்துணர்வை வலுப்படுத்தும் நோக்கில் ‘மைத்திரி சேது யாத்திரை 2027’

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான நீண்டகால நட்புறவு, பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்பை இளைய தலைமுறையினூடாக மேலும் வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இந்தியா – இலங்கை தேசிய…

135 0 0
இலங்கை செய்திகள்

ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தியே தனித்த கட்சி உருவாகக் காரணம் – காதர் மஸ்தான்

ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தி உள்ளிட்ட பல்வேறு காரணங்களே தனித்த அரசியல் கட்சியை உருவாக்க வேண்டிய சூழலை ஏற்படுத்தியதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர்…

137 0 0