உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
22 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

திண்மக்கழிவு முகாமைத்துவப் பிரிவிற்கு புதிய உழவு இயந்திரம் கையளிப்பு.!

இலங்கை செய்திகள் 2 வாரங்கள் முன்
117 பார்வைகள்

2026ஆம் ஆண்டுக்கான PSDG நிதி மற்றும் சம்மாந்துறை பிரதேச சபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், பிரதேசத்தின் திண்மக்கழிவு அகற்றல் சேவையை மேலும் வினைத்திறனுடன் முன்னெடுக்கும் நோக்கில் புதிதாகக் கொள்வனவு செய்யப்பட்ட உழவு இயந்திரம், திண்மக்கழிவு முகாமைத்துவப் பிரிவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் அவர்களினால் இவ் உழவு இயந்திரம் திண்மக்கழிவு அகற்றும் பணிக்காகச் சாரதியிடம் நேற்று செவ்வாய்க்கிழமை (10) உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ உப தவிசாளர் வீ.வினோகாந்த், சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர்களான வீ.ஜெயசந்திரன், ஏ.எல்.எம். ஜிப்ரி, எம்.ஆர். ஆஷிக் அஹம்மட், ஏ.எச்.எம். காலித், எம்.ஐ.எம். றிஸ்விக்கான், வை.எல். பஸீர், எஸ்.எல்.எம். பஹ்மி, ஏ.எம்.எம். அப்னான், ஏ.சீ.எம். நயீம், ஐ.எம். ஹாதிக், ஏ. சதானந்தா, எஸ்.எல்.ஏ. நஸார், எம்.எல்.ஏ. கபூர் ஆகியோருடன் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனீபா, சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் யூ.எல். அப்துல் மஜீட் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

சம்மாந்துறை பிரதேச சபையானது 132 சதுர கிலோமீற்றர் பரப்பளவில் 51 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை உள்ளடக்கி, 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சனத்தொகையைக் கொண்டு இயங்கி வருகிறது. இப்பிரதேசத்தில் சுமார் 33 வருடங்களுக்கும் மேலான பழமையான உழவு இயந்திரங்களைப் பயன்படுத்தியே இதுவரை காலம் திண்மக்கழிவு அகற்றல் சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

தற்போது புதிய உழவு இயந்திரம் சேவையில் இணைக்கப்பட்டுள்ளமையால், பிரதேச மக்களின் திண்மக்கழிவுகளை உடனுக்குடன் அகற்றித் தூய்மையான மற்றும் சுகாதாரமான சூழலை உருவாக்குவதற்குப் பாரிய பங்களிப்பு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகத் தவிசாளர் சுட்டிக்காட்டினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தொல். திருமாவளவனுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகளால் நூல்கள் வழங்கி வைப்பு!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் அவர்களுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகளால் நூல்கள் அடங்கிய தொகுதி ஒன்று வழங்கி வைக்கப்பட்டது.…

122 0 0
இலங்கை செய்திகள்

திறைசேரி நிரம்பி வழிந்தாலும் மக்கள் கையில் பணம் இல்லை : சஜித் விசனம்!

“திறைசேரி நிரம்பினாலும் மக்கள் கையில் பணம் நிரம்பவில்லை. மக்களிடம் பணப்புழக்கம் இல்லாமை பாரிய பிரச்சினையாகக் காணப்படுகின்றது” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். கொழும்பு பண்டாரநாயக்க…

128 0 0
இலங்கை செய்திகள்

இந்தியா – இலங்கை நட்புறவு மற்றும் பரஸ்பர புரிந்துணர்வை வலுப்படுத்தும் நோக்கில் ‘மைத்திரி சேது யாத்திரை 2027’

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான நீண்டகால நட்புறவு, பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்பை இளைய தலைமுறையினூடாக மேலும் வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இந்தியா – இலங்கை தேசிய…

135 0 0
இலங்கை செய்திகள்

ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தியே தனித்த கட்சி உருவாகக் காரணம் – காதர் மஸ்தான்

ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தி உள்ளிட்ட பல்வேறு காரணங்களே தனித்த அரசியல் கட்சியை உருவாக்க வேண்டிய சூழலை ஏற்படுத்தியதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர்…

137 0 0