உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
22 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்ஹாவின் 205ஆவது கொடியேற்ற விழா.!

இலங்கை செய்திகள் 2 வாரங்கள் முன்
114 பார்வைகள்

நானிலம் போற்றும் நாகூர் நாயகம், கருணைக் கடல், குத்புல் மஜீத் ஹழ்றத் செய்யிதுனா மஹான் சாஹுல் ஹமீது வலியுல்லாஹ் நாயகம் அன்னவர்களின் நினைவாக அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர மக்களால் நடாத்தப்பெறும் கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்ஹாவின் 205ஆவது வருடாந்தக் கொடியேற்று விழா நேற்று (10) கோலாகலமாக ஆரம்பமானது.

கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்ஹா ஷரீபின் தலைவர் அல்ஹாஜ் எம்.ஐ. அப்துல் அஸீஸ் தலைமையில் இந்நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.

கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாயலில் இருந்து புனிதக் கொடியானது உலமாக்கள், பக்கீர் ஜமாஅத்தினர், பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் ஊர்மக்கள் புடைசூழ ‘தீன் கலிமா’ முழக்கத்துடன் வீதி வழியாக ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்ஹாவின் மினாராக்களில் தக்பீர் முழக்கங்களுடன் ஏற்றி வைக்கப்பட்டது.

கொடியேற்ற தினத்தில் இருந்து தொடர்ந்து 12 நாட்களுக்குப் பாதுஷா சாஹுல் ஹமீது வலியுல்லாஹ் நாயகம் அன்னவர்களின் மீதான புனித மௌலித் ஷரீப் பாராயணம், பக்கீர் ஜமாஅத்தினரின் புனித றிபாஈ றாதிப் ஆன்மீக நிகழ்வுகள் மற்றும் உலமாப் பெருமக்களின் சன்மார்க்கச் சொற்பொழிவுகள் என்பன இடம்பெறவுள்ளன.

இவ்விழாவானது எதிர்வரும் நவம்பர் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொடியிறக்கத்துடன் நிறைவடையவுள்ளதுடன், அன்றைய தினம் மாபெரும் கந்தூரி அன்னதானமும் வழங்கி வைக்கப்படவுள்ளது. நாட்டின் பல பாகங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இக் கொடியேற்ற விழாவைக் காண்பதற்காகக் கல்முனைக்கு வருகை தந்திருந்தனர்.

இந்நிகழ்வில் கிராமிய அபிவிருத்தி மற்றும் சமூக வலுவூட்டுகை பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ, நாடாளுமன்ற உறுப்பினர்களான ஏ. ஆதம்பாவா, எம். நிஸாம் காரியப்பர், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் முஸாரப் முதுநபீன், கல்முனை பிரதேச செயலாளர் டி.எம்.எம். அன்சார் (நளீமி), கல்முனை மாநகர சபை ஆணையாளர் எம்.எம். நௌபீஸ், கல்முனைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி லசந்த களுவாராச்சி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

மேலும், கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர், முன்னாள் உறுப்பினர் எம்.எஸ்.எம். நிசார் (ஜே.பி), கல்முனை பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் எம்.என்.எம். ரம்சான், கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் மற்றும் நாகூர் ஆண்டகை தர்ஹா ஷரீபின் செயலாளர் எம்.எச்.எம். முபாரிஸ், பொருளாளர் எஸ்.எம். ரிப்னாஸ் உள்ளிட்ட தர்ஹா ஷரீப் நிர்வாகிகள், இராணுவ மற்றும் கடற்படை உயர் அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தொல். திருமாவளவனுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகளால் நூல்கள் வழங்கி வைப்பு!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் அவர்களுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகளால் நூல்கள் அடங்கிய தொகுதி ஒன்று வழங்கி வைக்கப்பட்டது.…

122 0 0
இலங்கை செய்திகள்

திறைசேரி நிரம்பி வழிந்தாலும் மக்கள் கையில் பணம் இல்லை : சஜித் விசனம்!

“திறைசேரி நிரம்பினாலும் மக்கள் கையில் பணம் நிரம்பவில்லை. மக்களிடம் பணப்புழக்கம் இல்லாமை பாரிய பிரச்சினையாகக் காணப்படுகின்றது” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். கொழும்பு பண்டாரநாயக்க…

128 0 0
இலங்கை செய்திகள்

இந்தியா – இலங்கை நட்புறவு மற்றும் பரஸ்பர புரிந்துணர்வை வலுப்படுத்தும் நோக்கில் ‘மைத்திரி சேது யாத்திரை 2027’

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான நீண்டகால நட்புறவு, பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்பை இளைய தலைமுறையினூடாக மேலும் வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இந்தியா – இலங்கை தேசிய…

135 0 0
இலங்கை செய்திகள்

ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தியே தனித்த கட்சி உருவாகக் காரணம் – காதர் மஸ்தான்

ஜனாசா எரிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தி உள்ளிட்ட பல்வேறு காரணங்களே தனித்த அரசியல் கட்சியை உருவாக்க வேண்டிய சூழலை ஏற்படுத்தியதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர்…

137 0 0