உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
22 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

உள்வீட்டு மோதல்களால் முற்றிலும் முடங்கிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி.!

இலங்கை செய்திகள் 2 வாரங்கள் முன்
135 பார்வைகள்

நீதிமன்ற வழக்குகளாலும் தொடர்ச்சியான உட்கட்சி மோதல்களாலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்துச் செயற்பாடுகளும் முடங்கிப் போயுள்ளன என்றும், அந்தக் கட்சி ஒரு செயலற்ற கட்சியாக நிலைமாறியுள்ளதால் எதிர்வரும் தேர்தல்களில் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய முடியாது எனத் தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் நிலவும் பாரிய நெருக்கடிகள் மற்றும் உட்கட்சி முரண்பாடுகள் குறித்து ஆராய்வதற்காகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதிநிதிகள் முன்னிலையில் விசேட கலந்தாய்வு நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
“2023ஆம் ஆண்டு முதல் மாவட்ட நீதிமன்றம் மற்றும் சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றம் ஆகியவற்றில் வழக்குகள் தொடரப்பட்டு, வழக்கு விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டு வருவதால் கட்சியின் இயங்குதன்மை முற்றிலும் முடங்கியுள்ளது தொடர்பில் இந்தக் கலந்தாய்வில் விரிவாகக் கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி செயலற்ற ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதால் அவர்கள் நடத்தும் மாநாடுகள், மே தினக் கூட்டங்கள் அல்லது புதிதாக நியமிக்கப்படும் தொகுதி அமைப்பாளர்கள் எதனையும் தேர்தல்கள் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக ஏற்பதில்லை எனவும், இவ்வாறான நியமனங்கள் சட்டப்படி செல்லுபடியற்றவை என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் தற்போதைய சூழலில் உத்தியோகபூர்வமாகத் தனித்துத் தேர்தலில் போட்டியிடக் கூட முடியாத பரிதாப நிலை உருவாகியுள்ளது. கட்சி தொடர்ந்து அழிந்துபோவதைத் தடுக்கவேண்டுமாயின், உடனடியாக உட்கட்சி உத்தியோகபூர்வத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

சுதந்திரக் கட்சியின் யாப்பு விதிமுறைகளுக்கு அமைய ஆண்டுதோறும் புதிய நிர்வாகத் தெரிவுக்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற போதிலும், கடந்த மூன்று வருடங்களாக எவ்வித தேர்தலும் நடத்தப்படவில்லை. விதிகளை மீறித் தொடர்ந்தும் பதவிகளில் நீடிப்பவர்களின் தற்போதைய நிர்வாகக் குழு முற்றிலும் செல்லுபடியற்றதாகும். அந்தச் சவாலை ஏற்றுக்கொண்டு தாமும் தமது அணியினரும் கட்சிப் பதவிகளுக்குப் போட்டியிடத் தயாராக இருப்பதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் தெரிவித்துள்ளோம்.

நீதிமன்ற வழக்குகளுக்கு அப்பால் தேர்தல்கள் ஆணைக்குழுவே அரசியல் கட்சிகளைத் தொடர்ந்து இயங்குநிலையில் வைத்திருக்கும் சட்டப் பொறுப்பைக் கொண்டுள்ளதால், இக்கலந்தாய்வை ஏற்பாடு செய்தமைக்காகத் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

அத்துடன், தற்போதைய நிர்வாகப் பதவிகளைப் பிடித்துக்கொண்டு இருப்பவர்கள் எவரும் பொதுத் தேர்தலில் மக்களால் தெரிவு செய்யப்படாது தமது மாவட்டங்களில் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் ஆவர்.

எனவே, நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தைக் கொண்ட ஒரு மக்கள் பிரதிநிதி மற்றும் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் என்ற ரீதியில், அடிமட்டக் கட்சி ஆதரவாளர்களின் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு, கட்சியை மீளக் கட்டியெழுப்பும் முகமாக உடனடியாக உட்கட்சி தேர்தலை நடத்துவதற்குத் தேவையான சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் நாம் கோரியுள்ளோம்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தமிழீழ தேசியக் கொடி நாள்’ வாரம் லண்டனில் முன்னெடுப்பு

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் ‘நவம்பர் 21ம் திகதி (21-11-2026) தமிழீழ தேசியக் கொடி நாள்’ வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், லண்டனில் குறித்த நிகழ்வு வைபவ ரீதியாக…

131 0 0
இலங்கை செய்திகள்

கோட்டாவின் வழியில் அநுர அரசாங்கம்! : அம்பாறையில் சஜித் கடும் சாடல்

கோட்டாபய ராஜபக்ஷவைப் போலவே அநுரகுமார திஸாநாயக்க அரசும் விவசாயிகளை ஏமாற்றியுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விவசாயிகள்…

125 0 0
இலங்கை செய்திகள்

தொல். திருமாவளவனுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகளால் நூல்கள் வழங்கி வைப்பு!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் அவர்களுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகளால் நூல்கள் அடங்கிய தொகுதி ஒன்று வழங்கி வைக்கப்பட்டது.…

129 0 0
இலங்கை செய்திகள்

திறைசேரி நிரம்பி வழிந்தாலும் மக்கள் கையில் பணம் இல்லை : சஜித் விசனம்!

“திறைசேரி நிரம்பினாலும் மக்கள் கையில் பணம் நிரம்பவில்லை. மக்களிடம் பணப்புழக்கம் இல்லாமை பாரிய பிரச்சினையாகக் காணப்படுகின்றது” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். கொழும்பு பண்டாரநாயக்க…

132 0 0