உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
22 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

கல்வித்துறையை இராணுவம் தன் கட்டுப்பாட்டில் வைப்பதா?

இலங்கை செய்திகள் 2 வாரங்கள் முன்
113 பார்வைகள்

யாழ்ப்பாணம், பலாலி ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் 54.5 ஏக்கர் காணி தற்போதும் இராணுவ வசமே உள்ளது என்றும், கல்வியியல் துறையை இராணுவம் தன்வசம் வைத்துள்ளமை நாட்டின் கல்வித்துறை வீழ்ச்சியடைந்துள்ளமையையே காட்டுகின்றது என்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் சுட்டிக்காட்டினார்.

எனவே, பலாலி ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் காணியை அரசு உடனடியாக விடுவித்து, அதனை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கல்வியியல் பீடமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘கல்வியியற் கல்லூரிகளைப் பல்கலைக்கழகப் பீடங்களாக மாற்றுவதற்கான’ தனிநபர் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
“மலையகத்தில் அமைந்துள்ள கொட்டகலை கல்வியியற் கல்லூரி மற்றும் ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரி என்பன மலையகத்தில் வாழும் 9 இலட்சத்துக்கும் அதிகமான தமிழ் மக்களுக்காகப் பல்கலைக்கழகங்களுடன் இணைக்கப்பட்ட பீடங்களாக மாற்றப்படும்போது, அது அப்பகுதி மாணவர்களின் கல்வி மற்றும் அடிப்படை வசதிகளை நிறைவு செய்யக் கூடியதாக அமையும்.

அதேபோன்று, யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கல்வியியல் துறையானது ஒரு தனித்துவமான கல்விப் பீடமாகத் தரம் உயர்த்தப்பட வேண்டும். அவ்வாறு மாற்றப்படும்போதுதான் முகாமைத்துவத் துறையிலுள்ள அதிபர்கள், கல்வியியலாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான முகாமைத்துவப் பயிற்சித் தேவைகள் வளர்ச்சியடைய முடியும்.

வலிகாமம் வடக்கு பிரதேச செயலகத்தின் உத்தியோகபூர்வத் தகவல்களின்படி, வரலாற்றுப் பெருமைமிக்க பலாலி ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் 54.5 ஏக்கர் நிலப்பரப்பு இப்போதும் இராணுவத்தின் வசமே காணப்படுகின்றது.

கல்வித்துறையை இராணுவப் பொறிமுறை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது என்றால், இந்த நாட்டின் கல்வித்துறை எந்தளவுக்கு முடங்கியுள்ளது என்பதற்கு இதுவே சான்றாகும். பலநூற்றுக்கணக்கான சிறந்த ஆசிரியர்களை உருவாக்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க பலாலி ஆசிரியர் பயிற்சி கலாசாலை இப்போதும் இராணுவ முகாம்களாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை ஏற்றுக்கொள்ள முடியாதது.

வட பகுதி மக்களின் காணிகளை விடுவிப்போம், மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவோம் என வாக்குறுதியளித்து ஆட்சிக்கு வந்த இந்த அரசு, உடனடியாக பலாலி ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் காணிகளையும் விடுவித்து, அதனை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் பிரதான பீடமாக மாற்றியமைக்கத் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தமிழீழ தேசியக் கொடி நாள்’ வாரம் லண்டனில் முன்னெடுப்பு

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் ‘நவம்பர் 21ம் திகதி (21-11-2026) தமிழீழ தேசியக் கொடி நாள்’ வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், லண்டனில் குறித்த நிகழ்வு வைபவ ரீதியாக…

131 0 0
இலங்கை செய்திகள்

கோட்டாவின் வழியில் அநுர அரசாங்கம்! : அம்பாறையில் சஜித் கடும் சாடல்

கோட்டாபய ராஜபக்ஷவைப் போலவே அநுரகுமார திஸாநாயக்க அரசும் விவசாயிகளை ஏமாற்றியுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விவசாயிகள்…

125 0 0
இலங்கை செய்திகள்

தொல். திருமாவளவனுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகளால் நூல்கள் வழங்கி வைப்பு!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் அவர்களுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகளால் நூல்கள் அடங்கிய தொகுதி ஒன்று வழங்கி வைக்கப்பட்டது.…

129 0 0
இலங்கை செய்திகள்

திறைசேரி நிரம்பி வழிந்தாலும் மக்கள் கையில் பணம் இல்லை : சஜித் விசனம்!

“திறைசேரி நிரம்பினாலும் மக்கள் கையில் பணம் நிரம்பவில்லை. மக்களிடம் பணப்புழக்கம் இல்லாமை பாரிய பிரச்சினையாகக் காணப்படுகின்றது” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். கொழும்பு பண்டாரநாயக்க…

132 0 0