உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
22 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

இருவேறு பகுதிகளில் இருவர் கொ**லை.!

இலங்கை செய்திகள் 2 வாரங்கள் முன்
109 பார்வைகள்

நாட்டில் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற கொலைச் சம்பவங்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குருநாகல் – வாரியபொல, ஹல்மில்லேவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்தவர்கள் மீது கூரிய ஆயுதத்தால் நடத்தப்பட்ட தாக்குதலில் 56 வயதுடைய ஆண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவம் இன்று சனிக்கிழமை (7) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்த நபர்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறு முற்றியதால் வீட்டில் இருந்தவர்கள் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதல் நடத்திவிட்டு சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீட்டில் இருந்தவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலின்போது காயமடைந்த பெண் மற்றும் சிறுமி ஆகிய இருவர் நிக்கவெரட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, களுத்துறை அங்குருவாதோட்டம், படகொட பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (6) கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 41 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இருவருக்கிடையில் இடம்பெற்ற வாய்த்தர்க்கம் காரணமாக கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் கல்பாத பிரதேசத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தாக்குதலில் காயமடைந்த இவர் ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரைக் கைது செய்ய அங்குருவாதோட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தமிழீழ தேசியக் கொடி நாள்’ வாரம் லண்டனில் முன்னெடுப்பு

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் ‘நவம்பர் 21ம் திகதி (21-11-2026) தமிழீழ தேசியக் கொடி நாள்’ வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், லண்டனில் குறித்த நிகழ்வு வைபவ ரீதியாக…

131 0 0
இலங்கை செய்திகள்

கோட்டாவின் வழியில் அநுர அரசாங்கம்! : அம்பாறையில் சஜித் கடும் சாடல்

கோட்டாபய ராஜபக்ஷவைப் போலவே அநுரகுமார திஸாநாயக்க அரசும் விவசாயிகளை ஏமாற்றியுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விவசாயிகள்…

125 0 0
இலங்கை செய்திகள்

தொல். திருமாவளவனுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகளால் நூல்கள் வழங்கி வைப்பு!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் அவர்களுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகளால் நூல்கள் அடங்கிய தொகுதி ஒன்று வழங்கி வைக்கப்பட்டது.…

129 0 0
இலங்கை செய்திகள்

திறைசேரி நிரம்பி வழிந்தாலும் மக்கள் கையில் பணம் இல்லை : சஜித் விசனம்!

“திறைசேரி நிரம்பினாலும் மக்கள் கையில் பணம் நிரம்பவில்லை. மக்களிடம் பணப்புழக்கம் இல்லாமை பாரிய பிரச்சினையாகக் காணப்படுகின்றது” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். கொழும்பு பண்டாரநாயக்க…

132 0 0