உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
22 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

பொலிஸுக்கு தன்னிச்சையான அதிகப்படியான அதிகாரங்களா?

இலங்கை செய்திகள் 2 வாரங்கள் முன்
121 பார்வைகள்

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் புதிய சட்டமூலத்தில் தடுப்புக் காவலில் வைக்கும் நேரத்தைக் குறைப்பது தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அறிவித்துள்ள போதிலும், பொலிஸாருக்குத் தன்னிச்சையான அதிகப்படியான அதிகாரங்கள் வழங்கப்பட்டிருப்பது மனித உரிமைகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி. தொலவத்த தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற நூல் வெளியீட்டு நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
“மக்களின் அடிப்படை மனித உரிமைகள் மற்றும் கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கும் நோக்கிலேயே அரசு இவ்வாறான புதிய அடக்குமுறைச் சட்டமூலங்களைக் கொண்டு வருகின்றது. பொதுமக்களின் சுதந்திரத்தையும் ஜனநாயக உரிமைகளையும் முடக்கும் அரசின் இத்தகைய நகர்வுகளுக்கு எதிராக அனைத்துத் தரப்பினரும் அரசியல் வேறுபாடுகளை மறந்து உடனடியாக ஒன்றிணைய வேண்டும்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக நீக்குவதாக வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த அரசு, தற்போது அதற்கு மாறாக மக்களின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளைக் கடுமையாகக் கட்டுப்படுத்தும் சட்டங்களைக் கொண்டு வருகின்றது.

புதிய சட்டமூலத்தின் பிரிவு 3இன் கீழ், அரசியல் அல்லது கருத்தியல் சார்ந்த நோக்கங்களை முன்னெடுப்பதே குற்றமாகக் கருதப்படும் ஆபத்தான சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. இது அரசுக்கு எதிரான மாற்றுக் கருத்துகளை முற்றிலும் ஒடுக்குவதற்காகவே பயன்படுத்தப்படவுள்ளது.

சந்தேகநபர்களை நீண்ட காலம் காவலில் வைக்கும் முழு அதிகாரமும் பொலிஸாருக்கும் நிர்வாகத்துக்கும் வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தடுப்புக்காவல் நேரத்தைக் குறைப்பது பற்றிப் பேசியபோதிலும், பொலிஸாரின் வரம்பற்ற அதிகாரங்கள் மனித உரிமைகளைப் பலியிடும் வகையிலேயே அமைந்துள்ளன.

அத்துடன், ஜனாதிபதிக்குத் தன்னிச்சையான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதால், கிராமப்புற பாதுகாப்பு அமைப்புகள் அல்லது மரண உதவிச் சங்கங்கள் போன்ற சாதாரண சிவில் அமைப்புகளைக் கூடத் தன் விருப்பம்போல் தடை செய்யப்பட்ட அமைப்புகளாக அறிவிக்கும் அபாயம் நிலவுகின்றது.

பொலிஸாருக்கு மட்டுமன்றி, சந்தேகநபர்களைக் காவலில் வைக்கும் அதிகாரம் ஆயுதப் படைகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இது நாட்டின் சிவில் நிர்வாக நிலையை மேலும் மோசமடையச் செய்யும்.

வர்த்தக முத்திரைகள் தொடர்பான விடயங்களைச் சட்டவிரோதக் குற்றப்பிரிவுகளின் கீழ் கொண்டு வந்திருப்பது, அரசுக்கு ஆதரவளிக்கும் குறிப்பிட்ட சில பெரு வணிக நிறுவனங்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காகவே ஆகும்.

அதேவேளை, அரச தரப்பினர் மீதான ஊழல் மற்றும் நிதி முறைகேடுகள் குறித்து எவ்வித நடுநிலையான விசாரணைகளும் முன்னெடுக்கப்படுவதில்லை.

பல தசாப்தங்களாகப் போராடிப் பெற்ற மனித உரிமைகளையும் ஜனநாயகச் சுதந்திரத்தையும் ஒட்டுமொத்தமாக பின்னோக்கி இழுத்துச் செல்லும் இந்த அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராக, கடந்த கால அரசியல் வேறுபாடுகளை மறந்து அனைவரும் சமூகமாக ஒன்றுபட்டு உரக்கக் குரல் கொடுக்க வேண்டும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தமிழீழ தேசியக் கொடி நாள்’ வாரம் லண்டனில் முன்னெடுப்பு

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் ‘நவம்பர் 21ம் திகதி (21-11-2026) தமிழீழ தேசியக் கொடி நாள்’ வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், லண்டனில் குறித்த நிகழ்வு வைபவ ரீதியாக…

131 0 0
இலங்கை செய்திகள்

கோட்டாவின் வழியில் அநுர அரசாங்கம்! : அம்பாறையில் சஜித் கடும் சாடல்

கோட்டாபய ராஜபக்ஷவைப் போலவே அநுரகுமார திஸாநாயக்க அரசும் விவசாயிகளை ஏமாற்றியுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விவசாயிகள்…

125 0 0
இலங்கை செய்திகள்

தொல். திருமாவளவனுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகளால் நூல்கள் வழங்கி வைப்பு!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் அவர்களுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகளால் நூல்கள் அடங்கிய தொகுதி ஒன்று வழங்கி வைக்கப்பட்டது.…

129 0 0
இலங்கை செய்திகள்

திறைசேரி நிரம்பி வழிந்தாலும் மக்கள் கையில் பணம் இல்லை : சஜித் விசனம்!

“திறைசேரி நிரம்பினாலும் மக்கள் கையில் பணம் நிரம்பவில்லை. மக்களிடம் பணப்புழக்கம் இல்லாமை பாரிய பிரச்சினையாகக் காணப்படுகின்றது” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். கொழும்பு பண்டாரநாயக்க…

132 0 0