உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
22 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

அடக்குமுறைகள் ஊடாக ஆட்சியை நடத்தும் தேவை எமக்குக் கிடையாது.!

இலங்கை செய்திகள் 2 வாரங்கள் முன்
110 பார்வைகள்

கடந்த ஈராண்டு கால ஆட்சியில் அரசுக்கு எதிராக வேலைநிறுத்தங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பல்வேறு கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டபோதிலும், அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு எந்தவிதமான அடக்குமுறை நடவடிக்கைகளையும் அரசு முன்னெடுக்கவில்லை என்று நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர தெரிவித்தார்.

அதேவேளை, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் முன்னெடுக்கும் போராட்டங்களும் முறையான நடைமுறைகளுக்கு அமைய இடம்பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

கொழும்பில் நேற்று புதன்கிழமை நீதிமன்ற நடவடிக்கையொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
“தடுப்புச் சட்டங்கள் நடைமுறையில் இருந்த போதிலும், அவற்றைப் பயன்படுத்தி மக்களை அடக்குவதற்கான நடவடிக்கைகளை நாம் முன்னெடுக்கவில்லை. ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசுக்கு எதிராகப் பல்வேறு விமர்சனங்களும், போராட்டங்களும் இடம்பெற்ற போதிலும் அவற்றுக்கு எதிராக அடக்குமுறை நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ளவில்லை.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்கு எதிராக நாம் ஏற்கனவே குரல் கொடுத்துள்ளதுடன், அதற்கு எதிராக நீதிமன்றத்திலும் நடவடிக்கை எடுத்துள்ளோம். பழைய பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தையும் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள புதிய சட்டமூலத்தையும் ஒப்பீடு செய்து பார்க்க வேண்டும்.

மக்களையும் ஊடகங்களையும் அடக்குவதற்கான எந்தவொரு தேவையும் அரசுக்கு இல்லை. சில ஊடகங்கள் தங்களுடைய தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களுக்கு அமையச் செயற்பட்ட போதிலும், உண்மையான செய்திகளையும் பொய்யான தகவல்களையும் மக்கள் தெளிவாகப் புரிந்துகொள்வார்கள். குறிப்பிட்ட ஊடகங்களை இலக்கு வைத்து அரசு தலையிட வேண்டிய அவசியம் கிடையாது.

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவருவதற்கு எதிர்க்கட்சியினருக்கு உரிமை உள்ளது. ஆனால், நாடாளுமன்றத்தின் அடிப்படை விதிமுறைகளையும் உரிய நடைமுறைகளையும் பின்பற்றி அதனைச் சமர்ப்பிக்க வேண்டும். நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவிலும், செயலாளர் பிரிவிலும் இது தொடர்பில் உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

அதனையும் மீறி எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தில் செங்கோலுக்கு அருகில் சென்று பதாகைகளை ஏந்தி எதிர்ப்பில் ஈடுபட்டனர். இவ்வாறான அரசியல் நாடகங்களால் மக்களுக்கு என்ன பயன் கிடைக்கப்போகின்றது என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள். மக்கள் சார்ந்த அரசாகவே நாம் தொடர்ந்தும் செயற்படுகின்றோம்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மழையை நம்பி மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்ச்செய்கை மழையின்மையால் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் 2026 /.2027 ஆம் ஆண்டுக்கான பெரும் போகநெற்செய்கை கொள்ளப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி நெத்தலியாறு பகுதியில் மழையை நம்பி நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய…

119 0 0
இலங்கை செய்திகள்

தமிழீழ தேசியக் கொடி நாள்’ வாரம் லண்டனில் முன்னெடுப்பு

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் ‘நவம்பர் 21ம் திகதி (21-11-2026) தமிழீழ தேசியக் கொடி நாள்’ வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், லண்டனில் குறித்த நிகழ்வு வைபவ ரீதியாக…

133 0 0
இலங்கை செய்திகள்

கோட்டாவின் வழியில் அநுர அரசாங்கம்! : அம்பாறையில் சஜித் கடும் சாடல்

கோட்டாபய ராஜபக்ஷவைப் போலவே அநுரகுமார திஸாநாயக்க அரசும் விவசாயிகளை ஏமாற்றியுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விவசாயிகள்…

126 0 0
இலங்கை செய்திகள்

தொல். திருமாவளவனுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகளால் நூல்கள் வழங்கி வைப்பு!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் அவர்களுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகளால் நூல்கள் அடங்கிய தொகுதி ஒன்று வழங்கி வைக்கப்பட்டது.…

131 0 0