நீரில் மூழ்கி இருவர் உ**யிரிழப்பு; இரு வேறு இடங்களில் துயரம்.!
நாட்டின் வெவ்வேறு இடங்களில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற நீரில் மூழ்கிய சம்பவங்களில் பெண் ஒருவர் உட்பட இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
கம்பஹா பொலிஸ் பிரிவின் மாகேவிட்ட பிரதேசத்தில் உள்ள கல்ல சொரொவ்வு அணைக்கட்டு அருகில் நேற்று திங்கட்கிழமை மாலை நண்பர்களுடன் நீராடிக் கொண்டிருந்த 18 வயதுடைய கணேமுல்ல பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
வவுனியா, நெளுக்குளம் பொலிஸ் பிரிவின் புளியங்குளம் பகுதியில் உள்ள குளத்தில் நேற்று திங்கட்கிழமை நண்பகல் 63 வயதுடைய வவுனியா பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
மேற்படி பெண் தனியாக வசித்து வந்த மனநலம் பாதிக்கப்பட்டவர் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அவர் குளத்துக்கு அருகே சென்றபோது தவறி விழுந்தமையால் இந்தச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது.
இந்தச் சம்பவங்கள் தொடர்பில் கம்பஹா மற்றும் நெளுக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


