உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
22 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

மாகாண சபைத் தேர்தல் சட்டச் சிக்கல்; விரைந்து தீர்வு காண வேண்டும்.!

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
134 பார்வைகள்

மாகாண சபைத் தேர்தல் சட்டத்தில் நிலவும் சட்டச் சிக்கல்களுக்குத் தீர்வு காணும் நடவடிக்கைகளை விரைவுபடுத்தி, அதற்குரிய அறிக்கையை விரைவில் நாடாளுமன்றத்துக்குச் சமர்ப்பிக்குமாறு மாகாண சபைத் தேர்தல் குறித்து ஆராயும் நாடாளுமன்ற விசேட செயற்குழுவிடம் வலியுறுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க ஊடகங்களிடம் தெரிவித்தார்.

மாகாண சபைத் தேர்தல் பற்றி ஆராயும் நாடாளுமன்ற விசேட செயற்குழுவின் அவகாசம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 17 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளமை மற்றும் தேர்தல் நடத்தப்படுவதில் நிலவும் முட்டுக்கட்டைகள் குறித்து வினவியபோதே அவர் இதனைக் கூறினார்.

இது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவிக்கையில்,
“மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் ஆராயும் நாடாளுமன்ற விசேட செயற்குழுவில் ஆணைக்குழு சார்பில் முன்னிலையாகிப் பல முக்கிய யோசனைகளை முன்வைத்துள்ளோம்.

பழைய தேர்தல் முறைமையின் கீழ் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியும் எனச் சட்டமா அதிபர் திணைக்களம் முன்வைத்துள்ள திருத்தப் பரிந்துரைகளுக்கு இணையாக, எங்களது தரப்பு யோசனைகளையும் சமர்ப்பித்துள்ளோம்.

முன்வைக்கப்படும் யோசனைகளையும் பரிந்துரைகளையும் விரைவாக ஆராய்ந்து, நாடாளுமன்றம் ஒரு உறுதியான தீர்மானத்தை எடுக்க வேண்டும். மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் மாகாண சபைகள் நீண்டகாலமாக இயங்குவது ஜனநாயகக் கோட்பாடுகளுக்கு முற்றிலும் விரோதமானதாகும்.” – என்றார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரம் மற்றும் புதிய பரிந்துரைகள் குறித்து அவர் மேலும் தெளிவுபடுத்துகையில்,
“மாகாண சபைத் தேர்தல் குறித்துத் தன்னிச்சையாகத் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குக் கிடையாது. 2017 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட புதிய தேர்தல் முறைமையின் சட்ட அம்சங்கள் இன்னும் முழுமை பெறாத காரணத்தால், எந்தத் தேர்தல் முறைமையின் கீழ் தேர்தலை நடத்துவது என்பதில் சட்டச் சிக்கல் நீடிக்கின்றது.

எனவே, தேர்தல் முறைமை குறித்து நாடாளுமன்றத்தின் ஊடாகவே தெளிவான சட்டத் தீர்மானம் எடுக்கப்பட வேண்டும். அப்போதுதான் தேர்தலை நடத்துவது குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்புகளை எம்மால் வெளியிட முடியும்.

அத்துடன், பெண் பிரதிநிதித்துவம் குறித்துச் செயற்குழு முன்வைத்த விடயங்களைக் கருத்திற்கொண்டு யோசனைகளை வழங்கியுள்ளோம். தற்போது இளைஞர் பிரதிநிதித்துவம் குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டு வருகின்றது. அது தொடர்பிலும் அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடி ஆணைக்குழுவின் யோசனைகளை முன்வைப்போம்.

செயற்குழுவின் காலத்தை மேலும் நீட்டிக்காமல், எதிர்வரும் மாதத்துக்குள் தனது அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கின்றோம்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம் திறந்து வைப்பு!

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மற்றும் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து மக்கள்…

125 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் விபத்து!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் இன்று (22) இரவு 7 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த சிறிய ரக மகிழுந்து ஒன்று, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10 இற்கும் மேற்பட்ட…

113 0 0
இலங்கை செய்திகள்

கூகுள் வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு அபகரிக்கப்பட்ட காணிகளை மக்களுக்கு மீள வழங்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தில் வனப் பாதுகாப்புத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்களின் வசமுள்ள காணிகளை மக்களுக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி.…

121 0 0
இலங்கை செய்திகள்

மழையை நம்பி மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்ச்செய்கை மழையின்மையால் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் 2026 /.2027 ஆம் ஆண்டுக்கான பெரும் போகநெற்செய்கை கொள்ளப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி நெத்தலியாறு பகுதியில் மழையை நம்பி நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய…

125 0 0