அரிய வகை உயிரினத்துடன் இருவர் கைது.!
அனலைதீவு மூன்றாம் வட்டாரம் பகுதியில் அரிய வகை உயிரினத்தை இறைச்சிக்கு பிடித்து வைத்திருந்த குற்றச்சாட்டில் 20, 28 வயது இளைஞர்கள் இருவர் அனலைதீவு பொலிஸ் பொறுப்பதிகாரி இராமச்சந்திரன் தலைமையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.


