உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
22 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

சபாநாயகருக்கு எதிரான பிரேரணை விவாதத்துக்கு எடுக்கப்படமாட்டாது! – சபை முதல்வர் பிமல் அறிவிப்பு

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
136 பார்வைகள்

எதிர்க்கட்சியினரால் சபாநாயகருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கையளிக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை, எதிர்வரும் நவம்பர் 3 ஆம் திகதி விவாதத்துக்கு  எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது என்று சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

நாடாளுமன்ற நிலையியல் கட்டளைகளுக்கு அமைவாகத் திருத்தப்பட்டு சமர்ப்பிக்கப்பட வேண்டிய குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை, நிர்ணயிக்கப்பட்ட ஒக்டோபர் 28 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்கப்படாத காரணத்தினாலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இது குறித்து ஊடகங்களுக்கு மேலும் கருத்துத் தெரிவித்த சபை முதல்வர், எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையில் சில தொழில்நுட்ப மற்றும் நடைமுறைச் சிக்கல்கள் காணப்பட்டன என்றும் குறிப்பிட்டார்.

அவற்றை நாடாளுமன்ற நடைமுறைகள் மற்றும் நிலையியல் கட்டளைகளுக்கு ஏற்பத் திருத்தியமைத்து, ஒக்டோபர் 28 ஆம் திகதிக்கு முன்னர் மீண்டும் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. எனினும், குறிப்பிட்ட கால எல்லைக்குள் திருத்தப்பட்ட பிரேரணை சமர்ப்பிக்கப்படாததனால், திட்டமிட்டபடி நவம்பர் 3 ஆம் திகதி அதனை விவாதத்துக்குப் எடுத்துக்கொள்ள முடியாது போனது என்றும் சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க தெளிவுபடுத்தினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம் திறந்து வைப்பு!

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மற்றும் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து மக்கள்…

134 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் விபத்து!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் இன்று (22) இரவு 7 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த சிறிய ரக மகிழுந்து ஒன்று, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10 இற்கும் மேற்பட்ட…

121 0 0
இலங்கை செய்திகள்

கூகுள் வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு அபகரிக்கப்பட்ட காணிகளை மக்களுக்கு மீள வழங்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தில் வனப் பாதுகாப்புத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்களின் வசமுள்ள காணிகளை மக்களுக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி.…

124 0 0
இலங்கை செய்திகள்

மழையை நம்பி மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்ச்செய்கை மழையின்மையால் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் 2026 /.2027 ஆம் ஆண்டுக்கான பெரும் போகநெற்செய்கை கொள்ளப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி நெத்தலியாறு பகுதியில் மழையை நம்பி நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய…

127 0 0