உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
22 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

கஸ்ஸப்பருக்கும் எமக்கும் எந்த அரசியலும் இல்லை.!

இலங்கை செய்திகள் 4 வாரங்கள் முன்
128 பார்வைகள்

கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்ட பலாங்கொட கஸ்ஸப்ப தேரருக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் எவ்வித அரசியல் தொடர்பும் கிடையாது என்று அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இந்திக அனுருத்த தெரிவித்தார்.

அதேவேளை, கஸ்ஸப்ப தேரருடனான சந்திப்பு தொடர்பான காணொளியை சம்பந்தப்பட்ட நட்சத்திர ஹோட்டல் நிர்வாகம் வெளியிட்டது முற்றிலும் தவறான செயல் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
“பௌத்த மதத்துக்கும் புத்தசாசனத்துக்கும் எதிரான போக்கையே தற்போதைய அரசு கடைப்பிடித்து வருகின்றது. அரசின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே நாம் போராட்டம் நடைபெற்ற இடத்துக்குச் சென்றோம்.

பௌத்த தர்மத்துக்கும் புத்தசாசனத்துக்கும் ஏதேனும் அச்சுறுத்தல்கள் அல்லது பாதிப்புகள் ஏற்படும்போது அதற்கு எதிராகக் குரல்கொடுப்பது எங்களது கடமை. அந்த அடிப்படையில் மட்டுமே விகாரமகாதேவி பூங்காவில் இடம்பெற்ற சத்தியாக்கிரகப் போராட்டத்தில் பங்கேற்றோரை நேரில் சென்று சந்தித்தோம்.

இதனைவிடுத்து போராட்டக்காரர்களுடன் எமக்கு எவ்வித மறைமுக அரசியல் பின்னணியோ அல்லது தொடர்போ கிடையாது.

தற்போதைய அரசு திட்டமிட்ட முறையில் பௌத்த மரபுகளுக்கு எதிராகச் செயற்பட்டு வருகின்றது. தேர்தல் காலத்தில் நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை முற்றிலும் மறந்துவிட்டு, எதிர்க்கட்சியினருக்கு எதிரான அரசியல் பழிவாங்கல்களுக்கு மட்டுமே இந்த அரசு முன்னுரிமை அளித்து வருகின்றது.

பொலிஸ் அதிகாரத்தைப் பயன்படுத்தித் தன்னிச்சையான கைது நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தி வருகின்றது.

ராஜபக்ஷக்கள் மீது தொடர்ச்சியாகப் போலிப் புகார்களைச் சுமத்தி கைது நடவடிக்கைகளை முன்னெடுப்பதால் மட்டும் நாட்டில் நிலவும் கடுமையான பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைத்துவிடாது. அரசு தனது பழிவாங்கும் அரசியலைக் கைவிட்டு மக்கள் நலன் சார்ந்த ஆட்சியை முன்னெடுக்க வேண்டும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம் திறந்து வைப்பு!

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மற்றும் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து மக்கள்…

145 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் விபத்து!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் இன்று (22) இரவு 7 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த சிறிய ரக மகிழுந்து ஒன்று, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10 இற்கும் மேற்பட்ட…

135 0 0
இலங்கை செய்திகள்

கூகுள் வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு அபகரிக்கப்பட்ட காணிகளை மக்களுக்கு மீள வழங்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தில் வனப் பாதுகாப்புத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்களின் வசமுள்ள காணிகளை மக்களுக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி.…

129 0 0
இலங்கை செய்திகள்

மழையை நம்பி மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்ச்செய்கை மழையின்மையால் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் 2026 /.2027 ஆம் ஆண்டுக்கான பெரும் போகநெற்செய்கை கொள்ளப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி நெத்தலியாறு பகுதியில் மழையை நம்பி நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய…

129 0 0