உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

செம்மணி அறிக்கை பச்சைப் பொய்! : பேராசிரியர் ராஜ் சோமதேவவின் குழுவுக்கு மக்கள் செயல் அமைப்பு கடுமையான எதிர்ப்பு

இலங்கை செய்திகள் 4 வாரங்கள் முன்
131 பார்வைகள்

    பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான தடவியல் தொல்லியல் அகழாய்வு குழுவினால் வெளியிடப்பட்டுள்ள செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி தொடர்பான இடைக்கால அறிக்கையை முழுமையாக நிராகரிப்பதாகவும், அதனை வன்மையாகக் கண்டிப்பதாகவும் மக்கள் செயல் அமைப்பு அறிவித்துள்ளது.

    யாழ். ஊடக அமையத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அமைப்பின் பிரதிநிதிகள் இந்த அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

    யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரிக்கு கடந்த ஒக்டோபர் 10 ஆம் திகதியிடப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த இடைக்கால அறிக்கையில், சித்துப்பாத்தி தளம் முறையான புதைப்பு நடைமுறைகளுடன் ஒற்றுப்போவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும், அதிகளவான புதைப்புகள் தொற்றுநோய் அல்லது இயற்கைப் பேரிடரால் ஏற்பட்டிருக்கலாம் எனவும், இறந்தவர்களின் உடல்களை விரைவாக அப்புறப்படுத்தும் நோக்கில் இத்தகைய புதைவுகள் நிகழ்ந்திருக்கக்கூடும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதை அமைப்பினர் சுட்டிக்காட்டினர்.

    அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

    “செம்மணி சித்துப்பாத்தி மயானம் என்பது சைவர்களின் எரிகாடு என்பதைத் தாண்டிய விவகாரமாகும். 1995 ஆம் ஆண்டுக்குப் பின்னர் யாழ்ப்பாணக் குடாநாடு இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வந்த காலப்பகுதியில், கொடூரமான இராணுவ சோதனைச்சாவடிக்கு அருகிலுள்ள பகுதியில் அமைந்திருந்த இந்த மயானத்தின் பின்னணியை தொல்லியல் குழுவினர் வசதியாக மறைத்துள்ளனர்.

    மனித எச்சங்களில் காணப்படும் இறப்பின் போதான காயங்கள், ஆடைகள் அகற்றப்பட்டுப் புதைக்கப்பட்ட முறை, சித்திரவதைக்கான தடயங்கள் மற்றும் அருகிலிருந்த இராணுவ முகாம்கள் தொடர்பில் அறிக்கையில் எத்தகைய குறிப்புகளும் இடம்பெறாமை பாரிய சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.

    இதற்கு முந்தைய அறிக்கைகளில் ‘மனிதப் புதைகுழி’ என்ற சொற்பதத்தைப் பயன்படுத்தி வந்த பேராசிரியர், தற்போதைய அறிக்கையில் வலிந்து அதனைத் தவிர்த்துள்ளமை அறிக்கையின் துல்லியத்தன்மை மீது அதீத சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    பொதுமக்களின் வரிப்பணத்தில் இயங்கும் ஆய்வுக்குழுவினர், மக்களின் நீண்டகால நீதிக்கான கோரிக்கைகளுக்கு விசுவாசமாக இருக்காது அரசின் விருப்பங்களைப் பிரதிபலிக்கும் வகையில் செயற்படுகின்றனர்.

    சித்துப்பாத்தியில் மீட்கப்பட்டுள்ள எச்சங்கள் மீதான கார்பன் – காலவியல் பரிசோதனைகள் இலங்கை அரசின் உள்ளகப் பொறிமுறைகளுக்குள் முடக்கப்படக் கூடாது. உலகளாவிய நியமங்களின்படி சர்வதேச மேற்பார்வை பொறிமுறையின் கீழ் முழுமையாக நடத்தப்பட வேண்டும்.

    எனவே, செம்மணி உள்ளிட்ட அனைத்து மனிதப் புதைகுழிகள் தொடர்பிலான நீதிவிசாரணைகளுக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தலையீட்டுடன் கூடிய நீதியான சர்வதேச விசாரணைப் பொறிமுறை உடனடியாக உருவாக்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசிய மக்கள் சார்பில் வலியுறுத்தி நிற்கின்றோம்.” – என்றனர்.

    உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
    மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

    விளம்பரம்

    தொடர்புடைய செய்திகள் NEW

    இலங்கை செய்திகள்

    கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம் திறந்து வைப்பு!

    கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மற்றும் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து மக்கள்…

    147 0 0
    இலங்கை செய்திகள்

    யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் விபத்து!

    யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் இன்று (22) இரவு 7 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த சிறிய ரக மகிழுந்து ஒன்று, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10 இற்கும் மேற்பட்ட…

    136 0 0
    இலங்கை செய்திகள்

    கூகுள் வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு அபகரிக்கப்பட்ட காணிகளை மக்களுக்கு மீள வழங்க வேண்டும்!

    வடக்கு மாகாணத்தில் வனப் பாதுகாப்புத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்களின் வசமுள்ள காணிகளை மக்களுக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி.…

    130 0 0
    இலங்கை செய்திகள்

    மழையை நம்பி மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்ச்செய்கை மழையின்மையால் பாதிப்பு

    கிளிநொச்சி மாவட்டத்தில் 2026 /.2027 ஆம் ஆண்டுக்கான பெரும் போகநெற்செய்கை கொள்ளப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி நெத்தலியாறு பகுதியில் மழையை நம்பி நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய…

    129 0 0