உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

நுகர்வோர் அதிகாரசபையின் அனுமதியின்றி கோதுமை மாவின் விலை உயர்வு; நிறுவனங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை.!

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
127 பார்வைகள்

2003 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க நுகர்வோர் விவகார அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் அத்தியாவசிய பொருளாக அறிவிக்கப்பட்டுள்ள கோதுமை மாவின் விலையானது, நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு முன்னறிவித்தல் எதுவுமின்றி தன்னிச்சையாக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த சட்டவிரோத விலை உயர்வு தொடர்பில் விரிவான விளக்கமளிக்குமாறு கோரி, நுகர்வோர் விவகார அதிகாரசபை நேற்றைய தினம் சம்பந்தப்பட்ட கோதுமை மா உற்பத்தி நிறுவனங்களுக்கு சிறப்பு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

அத்துடன், வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க அவர்களின் தலைமையில், இந்த சட்டவிரோத விலை உயர்வு குறித்து நிறுவனங்களிடம் ஆராய்வதற்காக வரும் அக்டோபர் 28 ஆம் திகதி சிறப்பு கலந்துரையாடல் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நுகர்வோர் விவகார அதிகாரசபைச் சட்டத்தின் கீழ், இத்தகைய முறையற்ற விலை உயர்த்தல்கள் குறித்து விசாரணை நடத்துவதற்கு அதிகாரசபைக்கு முழு அதிகாரம் உள்ளதால், அமைச்சரின் ஆலோசனையின் பேரில் ஒக்டோபர் 28 ஆம் திகதி நடைபெறும் பேச்சுவார்த்தையில் நிறுவனங்கள் தமது விளக்கங்களை முன்வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, கோதுமை மாவின் விலை உயர்த்தப்பட்டுள்ள போதிலும், மா சார்ந்த உணவுப் பொருட்களின் விலைகளை உயர்த்த வேண்டாம் என நுகர்வோர் விவகார அதிகாரசபை, அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்திடம் சிறப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இக்கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ள பேக்கரி உரிமையாளர்கள் சங்கம், தற்போதைய சூழலில் மா சார்ந்த தயாரிப்புகளின் விலைகளை உயர்த்தாமல் இருக்க இணக்கம் தெரிவித்துள்ளன.

கோதுமை மா உற்பத்தி நிறுவனங்களின் இந்த சட்டவிரோத விலை அதிகரிப்புக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, நுகர்வோர் விவகார அதிகாரசபை சட்டமா அதிபர் திணைக்களத்திடம் சட்ட ஆலோசனைகளைக் கோரியுள்ளது.

சட்ட ஆலோசனைகள் கிடைத்தவுடன், குறித்த நிறுவனங்களுக்கு எதிராக சட்டப்படி தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபையின் பதில் பணிப்பாளர் நாயகம் சமந்தா கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம் திறந்து வைப்பு!

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மற்றும் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து மக்கள்…

147 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் விபத்து!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் இன்று (22) இரவு 7 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த சிறிய ரக மகிழுந்து ஒன்று, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10 இற்கும் மேற்பட்ட…

137 0 0
இலங்கை செய்திகள்

கூகுள் வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு அபகரிக்கப்பட்ட காணிகளை மக்களுக்கு மீள வழங்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தில் வனப் பாதுகாப்புத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்களின் வசமுள்ள காணிகளை மக்களுக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி.…

131 0 0
இலங்கை செய்திகள்

மழையை நம்பி மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்ச்செய்கை மழையின்மையால் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் 2026 /.2027 ஆம் ஆண்டுக்கான பெரும் போகநெற்செய்கை கொள்ளப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி நெத்தலியாறு பகுதியில் மழையை நம்பி நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய…

130 0 0