உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

செம்மணிப் புதைகுழி விசாரணை; அரசாங்கத்தின் மீது கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடும் குற்றச்சாட்டு.!

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
116 பார்வைகள்

செம்மணி மனிதப் புதைகுழி விசாரணை தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள 4 ஆவது இடைக்கால அறிக்கை முற்றிலும் திசைதிருப்பப்பட்டதாகவும், உண்மைகளை மூடி மறைக்கும் சதிச் செயல் எனவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்றைய தினம் (23) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

செம்மணி விவகாரம் தொடர்பாக முன்னர் வெளியிடப்பட்ட அறிக்கைகளில் கூறப்பட்ட ஆய்வுகளை, 4 ஆவது இடைக்கால அறிக்கை தலைகீழாக மாற்றி எழுதியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுவரை கண்டெடுக்கப்பட்ட உடல்களில் பெரும்பான்மையானவை உடம்புகள் இன்றிப் புதைக்கப்பட்டுள்ளதாக முன்னர் தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இயற்கை அழுத்தம் காரணமாக உடைகள் மற்றும் உடல்கள் கரைந்து போயிருக்கலாம் என புது விளக்கம் அளிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் சர்வதேச நிபுணர்கள், செம்மணி விசாரணைக்கு போதிய நிதியும், தடயவியல் மற்றும் உடற்கூற்றியல் தொழில்நுட்ப வசதிகளும் இல்லை என்றும், சர்வதேச உதவிகள் அவசியமென்றும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

செம்மணி விசாரணைகளை சர்வதேசப் பொறுப்புடன் முழுமையாக நடத்த அரசாங்கம் தயங்குவதாகவும், குற்றங்களைச் செய்துவிட்டு அதனை மூடிமறைக்க முற்படும் முந்தைய அரசாங்கங்களை விட இந்த அரசாங்கம் வேறுபட்டதல்ல என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், செம்மணி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களும், நீதி கோருவோரும் இந்த அரசாங்கத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கையை முழுமையாக இழந்துவிட்டதாகவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம் திறந்து வைப்பு!

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மற்றும் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து மக்கள்…

147 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் விபத்து!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் இன்று (22) இரவு 7 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த சிறிய ரக மகிழுந்து ஒன்று, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10 இற்கும் மேற்பட்ட…

137 0 0
இலங்கை செய்திகள்

கூகுள் வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு அபகரிக்கப்பட்ட காணிகளை மக்களுக்கு மீள வழங்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தில் வனப் பாதுகாப்புத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்களின் வசமுள்ள காணிகளை மக்களுக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி.…

131 0 0
இலங்கை செய்திகள்

மழையை நம்பி மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்ச்செய்கை மழையின்மையால் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் 2026 /.2027 ஆம் ஆண்டுக்கான பெரும் போகநெற்செய்கை கொள்ளப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி நெத்தலியாறு பகுதியில் மழையை நம்பி நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய…

130 0 0