உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
22 வியாழன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

இரு அறநெறிப் பாடசாலைகளுக்கு தலா 50,000 ரூபாய் பெறுமதியான பொருட்கள் வழங்கி வைப்பு.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
90 பார்வைகள்

இந்து சமய கலாச்சாரத் திணைக்களத்தின் ஊடாக, அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட இரு அறநெறிப் பாடசாலைகளுக்கு தலா 50,000 ரூபாய் பெறுமதியான பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பிரிவில் இயங்கும் இராமகிருஷ்ணா அறநெறிப் பாடசாலை மற்றும் கண்ணகி அறநெறிப் பாடசாலை ஆகியவற்றுக்கே இப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் இந்து சமய கலாச்சாரப் பிரிவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வு, ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர். திரவியராஜ் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர், மாவட்ட இந்து கலாச்சார உத்தியோகத்தர், ஆலையடிவேம்பு பிரதேச செயலக இந்து கலாச்சார உத்தியோகத்தர், குறித்த அறநெறிப் பாடசாலைகளின் ஆசிரியர்கள், பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இந்து சமய கலாச்சாரத் திணைக்களத்தின் இவ்வாறான உதவிகள், அறநெறிப் பாடசாலைகளின் செயற்பாடுகளை மேம்படுத்துவதற்கும், மாணவர்களின் சமய மற்றும் ஒழுக்கக் கல்வியை ஊக்குவிப்பதற்கும் பங்களிப்புச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன், ஆலையடிவேம்பு பிரதேசத்தின் வளர்ச்சி மற்றும் அபிவிருத்தியை முன்னெடுப்பதில் பிரதேச செயலாளர் ஆர். திரவியராஜ் அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மின்சாரக் கட்டமைப்பின் முறிவால் நாட்டிற்கு 200 பில்லியனுக்கும் அதிக இழப்பு.!

அரசின் அலட்சியப் போக்கு காரணமாக தேசிய மின்சாரக் கட்டமைப்பு மீண்டும் ஒருமுறை செயலிழந்தமையால், நாட்டின் பொருளாதாரத்திற்கும் மக்களின் வாழ்வாதாரத்திற்கும் பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி…

75 0 0
இலங்கை செய்திகள்

இரு பிள்ளைகளின் தந்தை உ**யிரிழந்த நிலையில் மீட்பு.!

ஹட்டன், பன்மூர் பகுதியில் உள்ள குளமொன்றிலிருந்து இரு பிள்ளைகளின் தந்தை ஒருவர் இன்று (22) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு சடலமாக…

80 0 0
இலங்கை செய்திகள்

அரசின் புதிய சட்டமூலத்துக்கு எதிராக சர்வதேச மன்னிப்புச் சபை போர்க்கொடி.!

அரசால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான சட்டமூலம்’ ஊடாக மனித உரிமைகள் கடுமையாக மீறப்படுவதற்கும் உரிமைகள் சவாலுக்குள்ளாவதற்கும் கடுமையான அச்சுறுத்தல் காணப்படுகின்றது என்று சர்வதேச மன்னிப்புச்…

82 0 0
இலங்கை செய்திகள்

பாம் எண்ணெய் இறக்குமதிக் கட்டுப்பாடுகளை நீக்க நிதி அமைச்சின் அதிகாரிகள் முயற்சி.!

நிதி அமைச்சின் சில அதிகாரிகள் ஜனாதிபதியையும் அமைச்சரவையையும் தவறாக வழிநடத்தி, எதிர்வரும் வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக பாம் எண்ணெய் இறக்குமதிக் கட்டுப்பாடுகளை நீக்குவதற்கு முயற்சித்து…

81 0 0