உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
22 வியாழன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

யானையின் வாயிலிருந்த பொலித்தீனை அகற்றி சிகிச்சை அளிக்க நடவடிக்கை.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
74 பார்வைகள்

கிழக்கு வனவிலங்கு மண்டலம் அம்பாறை வனவிலங்கு அலுவலகத்தின் கீழ் உள்ள வளத்தாப்பிட்டி களப் பாதுகாப்புப் படைப் பகுதியின் சம்மாந்துறை பிரிவு எண் 4 இல் அமைந்துள்ள நெல் வயலில் நேற்று (21) காலையில் காட்டு யானை ஒன்று எழ முடியாமல் விழுந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் வனவிலங்கு அதிகாரிகளின் தகவல்படி சுமார் 15 வயதுடைய ஆண் யானை ஒன்றே இவ்வாறு நெல் வயலின் நடுவே பலவீனமடைந்து வீழ்ந்துள்ளதாக ஆரம்ப விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

மனிதர்களால் வீசப்படும் கழிவுகள் மற்றும் குப்பைகளை உண்டதன் காரணமாக ஏற்பட்ட கடுமையான செரிமானக் கோளாறு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாகவே இந்த யானை சுயநினைவிழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு வயலில் விழுந்துள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

சம்பவ இடத்திற்குச் சென்ற வனவிலங்கு அதிகாரிகள் யானையின் வாயினுள் சிக்கியிருந்த ஆபத்தான பொலித்தீன் கழிவுகளைக் குச்சி ஒன்றின் உதவியுடன் மிகவும் நுணுக்கமாக அகற்றியுள்ளனர்.

தொடர்ந்து பலவீனமாக இருக்கும் அந்த யானைக்குப் புத்துணர்ச்சியூட்டும் வகையில் பழங்கள் உணவாக வழங்கப்பட்டு வருகின்றன.

மேலும், குறித்த யானைக்கு வனவிலங்கு சுகாதாரப் பிரிவினரால் அவசர மருத்துவச் சிகிச்சைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் யானையை மீண்டும் முழுமையாகக் குணப்படுத்தி இயல்பு நிலைக்குக் கொண்டுவர தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அரசின் புதிய சட்டமூலத்துக்கு எதிராக சர்வதேச மன்னிப்புச் சபை போர்க்கொடி.!

அரசால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான சட்டமூலம்’ ஊடாக மனித உரிமைகள் கடுமையாக மீறப்படுவதற்கும் உரிமைகள் சவாலுக்குள்ளாவதற்கும் கடுமையான அச்சுறுத்தல் காணப்படுகின்றது என்று சர்வதேச மன்னிப்புச்…

1 0 0
இலங்கை செய்திகள்

பாம் எண்ணெய் இறக்குமதிக் கட்டுப்பாடுகளை நீக்க நிதி அமைச்சின் அதிகாரிகள் முயற்சி.!

நிதி அமைச்சின் சில அதிகாரிகள் ஜனாதிபதியையும் அமைச்சரவையையும் தவறாக வழிநடத்தி, எதிர்வரும் வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக பாம் எண்ணெய் இறக்குமதிக் கட்டுப்பாடுகளை நீக்குவதற்கு முயற்சித்து…

74 0 0
இலங்கை செய்திகள்

இரு அறநெறிப் பாடசாலைகளுக்கு தலா 50,000 ரூபாய் பெறுமதியான பொருட்கள் வழங்கி வைப்பு.!

இந்து சமய கலாச்சாரத் திணைக்களத்தின் ஊடாக, அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட இரு அறநெறிப் பாடசாலைகளுக்கு தலா 50,000 ரூபாய் பெறுமதியான…

85 0 0
இலங்கை செய்திகள்

மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் உ**யிரிழப்பு.!

அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரித்தகந்த பிரதேசத்தில் உள்ள நிர்மாணப் பணித்தளமொன்றில் நேற்று புதன்கிழமை (21) இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த நிர்மாணப் பணித்தளத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த…

76 0 0